பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


கல்வி 99 நாட்டில் வாழ்கின்றது. எனினும் மேலே கண்ட கண் எனப் போற்றும் சமுதாய வாழ்வளிக்கும் கல்வியே நாட்டில் அமைக்க வேண்டும். அந்த நெறி சமுதாயத்தை வாழ வைக்கும்-வளம் பெருக்க வழி காட்டும். கல்வி ஒருவனை உயர்த்துகிறது-"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே எனவும். ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோனாறு அரசும் செல்லும், என்றும் சங்கப்பாடல் அடிகள் நமக்கு அறிவுறுத்து வது அறிய வேண்டும். இவற்றால் தனிமனித உயர்வும் அரசு வழி அமையும் சமுதாய உயர்வும் குறிக்கப்பெறவில்லையா! ஆம்! எல்லாரும் வாழ வேண்டும் என்ற கல்வி மக்கள் அனை வருக்கும் தரப்பெறின் நாடு நலம் பெற்று ஓங்கும். இனி, கல்வி தெய்வ நெறிக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் வழி காட்டும் என்பதும் உறுதி. அதனால்தான் வள்ளுவர் முதலிலேயே கடவுள் வாழ்த்தில் அகர முதல என்ற முதற் குறளில் இறைவன் உள்ளமையைக் காட்டி, அடுத்த குறளிலேயே. - கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ . (2) என்று கல்வியின் பயன் இறைவனடி தொழுதல் என்பதைச் சுட்டுகின்றார். பின் அதன் வழியே பிற எல்லாப் பாடல் களும் செல்லுகின்றன. அப்பரடிகளும் இறைவன் கற்றவர் உள்ளத்திலே வீற்றிருப்பான் என்ற உண்மையினை, கல்லா தார் மனத்தணுகாக் கடவுள் தன்னை, கற்றாரும் உற்று ஒரும் காதலானை' என்கின்றார். எனவே கல்வி இம்மை வாழ்வில் ஏற்றத்தையும் இணைப்பையும் இன்பத்தையும் தருவதோடு, மறுமை வாழ்வுக்கும் வழி கோலுகிறது என்பது தெளிவு.