பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சான்றோர் வாக்கு


98 சான்றோர் வாக்கு கள் மேற்கொண்டு, பலப்பல வழிகளில் கல்லாமையினைப் போக்கப் பாடுபடுகின்றன. பள்ளியில் பயிலும் பிள்ளை களுக்கு மட்டுமன்றி வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் எங்கோ ஒதுக்கிடங்களில் வாழும் தாழ்ந்தோருக்கும்கூடக் கல்வி கற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப் பெறுகின்றன. அண்டை மாநிலமான கேரளம் முற்றும் கற்றவராகிய நிலை யினை எட்டுகிறது எனக் காண்கிறோம். நம் தமிழகமும் அந்த நிலையினை விரைவில் அடையும் வகையில் இன்றைய அரசு எல்லா வகையிலும் முயற்சி செய்கிறதென அறிகிறோம். கல்வி ஏன் அத்துணை முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி வெறும் உத்தியோகத்துக்கு மட்டும் பயன்படுவதன்று. சமுதாய வளர்ச்சிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் பிற நல்ல வளர்ச்சிகளுக்கும் கல்வி உறுதுணையாக அமைகின்றது. கற்றவர் மற்றவர்களைத் தம்மைப் போலவே எண்ணி, ஒத்து நோக்கி, ஒன்றிய சமுதாயமாக வாழ வழி காட்டுபவர். தாம் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் என்ற உள்ளத்து உணர்வால் செயலாற்றுபவர்கள். ஆம்! இந்த நிலைதான் கல்வியின் பயன். வள்ளுவர்,

  • தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார் (399) என்கின்றார். கல்வியின் பயன்(இதுவே. கற்றவர்கள் தாம் எந்தெந்த வகை யில் இன்பம் காண்கின்றார்களோ, அந்த இன்ப நெறியினை மற்றவரும்-சமுதாயமும் பெறவேண்டும் என உழைக்க வேண்டும். எல்லாரும் எல்லாச் செல்வமும்' பெறப் பாடு படுவதே கல்வியின் குறிக்கோளாக அமைய வேண்டும். அத்தகைய கல்வி இன்று நாட்டில் இல்லைதான். இன்றுள்ள கல்வி, போட்டியில், தானே வெற்றிபெறவேண்டும் என்ற சுய உணர்வையும் வாழ்வுக்குத் தேவையற்ற நிலையிலும், என்றோ யாரோ அடிமை நாட்டினர் வகுத்த வகையிலும் நம்