பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


கல்வி 97 பயிலும் நாடுகளில்தானே உலகப் போராட்ட விதைகள் தூவப் பெறுகின்றன. இந்த அவலநிலையை எண்ணித்தான் போற்றும் வள்ளுவர் அன்றே தாம் இன்புறுவது உலகின் புறக்காணலே கல்வியும் அதன் வழியே பெறும் அறிவும் என்கின்றார், அத்தகைய நல்ல கல்வி நாட்டில் மலர வேண்டும்- எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும் வகையில் நாம் கற்று அறிந்தவர் களாக வேண்டும். அத்தகைய கல்வியே தனி மனிதனுக்கு உள அமைதியையும் சமுதாயத்தில் ஒருமை உணர்வையும் உலகத்தில் சமாதானத்தையும் உண்டாக்கும். இன்றைய கற்றவர்கள் நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை என்ற நினைவுடன் நாட்டிலும் உலகிலும் ஒருமை உணர்வையும் தூய்மை உள்ளத்தையும் ஒன்றிய உலகையும் உண்டாக்க வேண்டுமெனக் கேட்டு அமைகின்றேன். கல்வி மக்கள் வாழ்வின் அடிப்படை, ஆறறிவு பெற்ற மனிதன் கற்றவனாக இருத்தல் வேண்டும். அதனாலேயே அதனைக் கண் என்று அறிஞர்கள் காட்டியுள்ளார்கள். 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என ஒளவையாரும் 'எண்ளன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” 6Ꭲ ❍Ꭲ வள்ளுவரும் காட்டியுள்ளனர். ஆம்! கண்ணற்ற குருடன் வாழ்வினும் கீழாகக் கல்லாதார் வாழ்வு கழியும் என்பது உண்மை. புலவர்கள் காட்டும் சான்றுகளும் நம் வாழ்வும் இந்த உண்மையினை வற்புறுத்துகின்றன. இன்றைய உலகில் கல்லாதவரில் பாதிப்பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்று கணக்கிடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் பலப்பல முயற்சி