பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

சான்றோர் வாக்கு


96 சான்றோர் வாக்கு வாழ வைக்கப் பயன்படுவது என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே பெரியவர்கள் நம் நாட்டில் வற்புறுத்தியுள்ளனர்: திருவள்ளுவர் தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் எனக் கூறுகின்றார். இதன்வழி கற்றவர் என்பர் தாம் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் 6T65F எண்ணுபவர்-பாடுபடுபவரேயாவர் இன்றைய கல்வியாளர் இந்த நிலையில் உள்ளனரா! "கல்வி ஆங்காரம் துன்பம்; கற்றிலனாகில் துன்பம் என்று குசேலர் உபாக்கியானம் கூறியபடி, கற்றோர் ஆங்காரத்தால் தாம் உயர்ந்தவர் எனத் தருக்கு கொள்ளுகின்றார். கல்லா தார் ஏங்குகின்றனர். இதுதான் இன்றைய கல்வி நிலை. இன்று நாட்டில்-உலகில் நடக்கும் பல கொடுமைக்குக் கற்றவர்தாமே காரணம். நாட்டுத் தலைவர்கள்-உலகத்த வர்களெல்லாம் கற்றவர்தாமே! ஆம் என்றால் பின் கொடுமை நிலவுவானேன்? அக்கல்வி வள்ளுவர் காட்டிய நல்ல அறநெறிக்கு வழி வகுக்காததே யாகும். அதனாலே தான் தாயுமானவர் மாணிக்கவாசகர் போன்ற பெரியவர்கள் “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்றும் 'கற்பனவும் இனி அமையும்’ என்றும் கூறுகின்றனர். இராம கிருஷ்ணபரமாம்சர், ஞானசம்பந்தர், இயேசு பெருமான் போன்ற அறம் வளர்த்த சமயத் தலைவர்கள் எந்தக் கல்லூரி யிலும் கற்றவர்கள் அல்லரே! இதனால் கல்வி வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. உயிர்க்கு உற்ற துணை அதுதான். கற்க வேண்டும்; கற்று அதன் வழி நிற்க வேண்டும். நம் நாட்டில் திருக்குறளைக் கற்கிறோம்; அதன் வழி நிற்கிறோமா! அகிம்சையினைப் போதித்த புத்தரைப் போற்றுகின்ற நாட்டவர் அவர் அறிவுரைப் படிக்கிறார்களே; அவர் சொல்லியபடி நடக்கிறார்களா? இயேசுவின் பொன்மொழி