பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


கல்வி 95 வேண்ட அறியேன்” என்று சொல்லுகிறார். இந்த நிலையில் இன்றைய மனிதன் வாழத் தொடங்குவதே அறநெறி. அது தான் கல்வியும் கூட. நாட்டில் நாடோறும் கல்விக் கூடங்கள் வளர்கின்றன. பலர் அதிகமாகப் பயில்கின்றனர். நம்நாட்டைக் காட்டிலும் உலகில் வேறு சில நாடுகளில் கற்றவர் எண்ணிக்கை விழுக் காடு அதிகமாக இருக்கும். ஆயினும் நாட்டிலும் உலகிலும் அமைதியில்லா நிலையினைக் காண்கிறோமே! ஏன்? 'நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" என்பது நாலடி. கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்றதுணை’ என்றும் எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து என்றும் கூறியுள்ளனர். எனவே கல்வி இவ்வுலகில் வாழும் உயிர் களுக்கு-சிறப்பாக அறிவுடை மனிதனுக்கு உற்றதுணை யாகவும், துயர்தீர்க்கும் மருந்தாகவும், வாழ்க்கைக்கு அழகும் பொலிவும் ஊட்டுவதாகவும் அமைகின்றது. ஆனால் இன்று கற்றவர்களாலேயே பல கொடுமைகள் நாட்டில் விளை வதைக் காண்கின்றோமே! ஏன்? இன்று நம் நாட்டில் கல்வி பற்றிப் பலவாறு பேசப் பெறுகிறது. புதிய கல்வித் திட்டம் பற்றி மாநாடுகள், கருத் தரங்குகள் நடந்து ஒய்ந்து விட்டன. செயலாற்றத் திட்டங் கள் தீட்டி, நூல்களும் எழுதப் பெற்று, நடைமுறைக்கும் வரத் தொடங்கி விட்டது. எனினும் அதுபற்றிய மாறு பாட்டுக் கருத்துக்களும் வேறுபாட்டுக் கொள்கைகளும் இல்லாமல் போகவில்லை. மொழிச் சண்டை, கல்வி மத்தியிலா? மாநிலத்திலா? என்ற வேறுபாடு; இன்னபிற தலை விரித்தாடுகின்றன. இவை எல்லாம் நாம் மேலே காட்டிய நல்லவர்தம் வாய்மொழிகளை உணராத நிலையி லேயே உண்டாகின்றன. கல்வி தம்மை ஒறுத்து மற்றவரை