பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சான்றோர் வாக்கு


94 . சான்றோர் வாக்கு வாழும் வள்ளுவரே-அவர்தம் குறளே சான்றென அமையக் கொள்ளல் பொருந்து மல்லவா! இத்தகைய வள்ளுவர் பெயரிலே மதுரைத் திருவள்ளுவர் கழகம் அமைந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொண் டாற்றி வருகின்றது. அதன் தலைவராகச் சிறந்து நின்ற பொன்னம்பலத் தியாகராசர் அவர்தம் நூற்றாண்டு விழாவும் மதுரைத் திருவள்ளுவர் கழகப்பொன்விழாவும் இணைந்துஇயைந்து சிறக்க நிற்பதை அறிந்து உளமகிழ்கின்றேன். வள்ளுவர் குறள் போல் வையம் உள்ளளவும் கழகத்தின் புகழும் அதைத் தலைமை தாங்கி நடத்திய அண்ணலார்புகழும் என்றென்றும் சிறக்க வாழும் என்பது உறுதி. அங்கயற்கண்ணி யொடு அமர்ந்தருளும் சொக்கேசர் இந்த ஆடி வீதியை நோக்கி அருள்புரிவாராக! や கல்வி இறைவன் முன்நின்று வழிபாடாற்றுகின்றார் தாயுமானவர். இறைவன் அவர் முன் தோன்றி வேண்டியதைக் கேள்’ எனச் சொல்லி இருப்பார் போலும். உடனே அவர் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே என்று வேண்டிக் கொண்டார். ஆம்! நல்லவர் உள்ளம் இதைத்தான் வேண்டும். நம்மைப் போன்றார் தமக்கு இது வேண்டும்' அது வேண்டும், எனக் கேட்பர். தாயுமானவர் உலகில் எல்லாரும் இன்புற்றிருக்கும் அந்தப் பெருந்நிலையினையே வேண்டுகிறார். இறைவன் அந்த வரத்தைத் தந்து வேறு உனக்காக ஏதேனும் வேண்டுமோ எனக் கேட்டிருப்பாரோ! அதனால்தான் அது அல்லாமல் வேறொன்றும் வேண்டேன்