பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


நூலும் அறிவும் 93 , of சாதாரணக் கண் கொண்டு பார்க்கும் போது, கண்ணுக் குத் தெரிவது சிறு தூரமாக அமைய, தெரியாதன அதிகமாக உள்ளதறிவோம். பின் மேனோக்கிக் காணுங்கால் தெரிவன சில தெரியாதன பலவாகக் காண்கின்றோம். ஒரு சாதாரண பூதக்க ண்ணாடியினை-தொலை நாடியினைக் கொண்டு பார்த்தால் நாம் முன் அறியாததன் எல்லைவரை நமக்குத் தெரிகிறது. ஆனால் அதுவே முடிந்த எல்லை என எண்ணிய நமக்கு, அந்த எல்லையைத் தாண்டி அறியாத எல்லை பெரி தாகத் தெரிகிறது. இப்படியே இன்னும் உயரிய தொலைநாடி கொண்டு பார்ப்பின் முன் அறியாத எல்லை முற்றும் தெரிய, மேலும் அறியாத எல்லை இன்னும் பெருகிக் கொண்டே போகும். 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருங் தன்மை வளப்பருங் காட்சி இல்நுழை கதிரின் துண் அணுப் புரைய நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்று நம் கண்முன் இல்லுழைகதிர் ஒளியில் எண்ண முடியாத அணுத்திரள்களைக் காட்டி, அவை சிறிதாக அண்டத்துக்கும் அப்பாலாய அறியாதன பெரிதாக உள்ள தன்மையினையும் மணிவாசகர் காட்டுகின்றார். ஆம்! அறிதோறும் அறியா நிலை காணும் அறிவு அத்துணை பரந்தது; எல்லையற்றது; முற்றும் காணமுடியாதது-முடிவற்றது. இந்த அறிவைத் தான் நாம் மேலே காட்டிய நூல் அறிவு ஓரளவு அளிக்கும் என்கிறார் வள்ளுவர். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (396) என்பது அவர் வாக்கு. இவ்வாறு ஆழ்ந்து நோக்கின் இந்த அறிவுக்கும் நூல் நயத்துக்கும் கல்விக்கும் அவற்றின் பயனுக்கும் என்றும்