பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சான்றோர் வாக்கு


92 சான்றோர் வாக்கு ண்டாதன என-விலக்குக எனக் கூற முடியுமா! அங்கியை 9வல் கொள்ள முடியுமா! நடக்கக்கூடியதா என்ற வினா எழுப்பி ‘எரியே அவளைச்சுடல் என்ற சீதையின் கதையும் 'தீத்திறத்தார் பக்கமே சேர்க' என்ற கண்ணகியின் கதையும் அழிக்க வேண்டியனவா! இவை மூன்றும் இன்றேல் பின் எவற்றைத் தமிழ் இலக்கியம் என்று கூறப்போகிறார்கள். பாரதியை உலகளாவப் பாராட்டும் இவர்கள் அப்பாரதி பாராட்டும் இம்மூவரையும் மூடிவிட்டுப் பின் எப்படித் தமிழ்ச் சமுதாயமாக வாழப்பேசுகிறார்கள்? எங்கோ சென்று விட்டேன். மன்னியுங்கள். இக்குறள் வழி, பலர் அறிந்த உண்மையை உவமையாக வள்ளுவர் விளக்கியுள்ளார். நல்ல நூல் படிக்கப் படிக்கப் புதுப்புதுக் கருத்துக்களை-காலத்தை வெல்லும் கருத்துக் களை-அவ்வக்காலத்து வாழும் சமுதாயத்துக்கு ஏற்ற கருத்துக்களைத் தருவதாகும். அதற்குச் சான்று இக்குறளும் மேற்கூறிய இரு பிற நூல்களுமேயாம். இவை என்றென்றும் வாழ்வனவாம்! தமிழிலும் பிற மொழிகளிலும் சிறக்க வாழ்வனவாம்! இனி, அறிவு என்பதை எண்ணிப்பார்ப்போம். வள்ளுவர் இதையும் உவமை வாயிலாகக் காமத்துப் பாலில் குறிக் கின்றார். 'அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு (1110) என்ற குறளே அது. இங்கே அறிவு உவமையாக்கப்படுவதால், அது உலகறி உண்மையாகின்றது. அறிய அறிய நாம் அறிய வேண்டுவன அதிகமாக அதிகமாக உள்ளதை உணர முடிகிறது. அதுபோன்று சேயிழைமாட்டுப் பெறும் இன்பமும் பெருகிப் பெருகி , இன்னும் அவள்வழிப் பெற வேண்டிய சிறக்கச் பெரிது பெரிது என உணர்ந்து அவர்கள் வாழ்வை இன்பம் செய்கிறது என்பதாம்,