பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


நூலும் அறிவும் 91 வாழ்விலக்கியங்களை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். எது போல என்ற வினா எழும் அல்லவா! அதற். காகவே பயில் தொறும் நூல் நயம் போலும் என்று முன்னே உவமையைக் காட்டி, பின்னே கூற வந்ததை விளக்கு முகத்தான் உவமைப் பொருளின் ஏற்றத்தை உணர்த்தி விட்டார். இதற்கு உரை கூற வந்த பரிமேலழகர் இருமை யினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாம் எனக் காட்டுவர். காளிங்கர் கற்குந்தொறும் கற்குந் தொறும் கற்பவர்க்கு நூல் நயம் செய்யும் இனிமை என்பர். எனவே நூல் இத்தகையதாக அமைய வேண்டும்; அதைக் கற்பவரே கற்றவர்; அல்லார் யாரோ. இவர்களைப் பற்றித்தான் நான் மேலே காட்டிய இரண்டு குறட்பாக்களும் எழுந்தன. "நுண்ணிய நூல் என்றாலும் அதன் நுண்மை அறியாமல் கற்றதனால் பயன் என்ன! உலக வாழ்வை - சமுதாய வாழ்வை உயிர் வாழ்வை உணர்த்தவே நூல்கள் எழுகின்றன. ஆதலால், நூல்களுள் பொதிந்த அந்த அடிப்படை உண்மை யினை உணராமல் எத்தனை நூல்கள் படித்தாலும் என்ன பயன்? இவர்களை எண்ணித்தான் பாரதி, 'அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்’ என்று பாடியுள்ளார். இவ்வாறு உயரிய கருத்துக்களை உள்ளடக்கிய வள்ளுவர் தம் திருக்குறளை, அதில் ஒரு சில அடிகள் இக்காலத்துக்கு ஒவ்வாதன; அவற்றை நீக்கி அச்சிட வேண்டுமெனச் சிலர் பேசுகின்றார்கள் என்றால் அவர்கள் பாரதிபாடலுக்கு இலக்கியமாக நிற்பவராவர். வள்ளுவர் திருக்குறள் இறைவ னைப் போன்று எல்லாருக்கும்-எச்சமயத்தோர்க்கும் எக் காலத்துக்கும் பொருந்தும் நூல் என்று எல்லா நாட்டவரும் போற்றும் இந்நாளில், இப்படித் தங்களுக்கு நயன் காண முடியா நிலையில்-பொருள் காண முடியா வகையில் அவை