பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சான்றோர் வாக்கு


90 சான்றோர் வாக்கு என்கிறார். இக்கற்றலையும் அறிவினையும் தனித்தனி அதிகாரங்களில் சிறப்பித்துச் சொல்லும் வள்ளுவர் சிலவிடங் களில் உவமைகளாக இவற்றைக்காட்டி மற்றையவற்றை விளக்குவர். உவமை காட்டப்பெறும் பொருள் அறியப்பட்ட ஒன்றல்லவா!எனவே இக்கல்வி-நூல்-அறிவு இவை நாட்டில் நன்கு அறியப் பெற்றனவாம். நூல்களைக் கற்று அறிந்தார் தாம் இன்புறுவது உலகின் புறக் கானும் தன்மையர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் தன்மையர். அவர்கள் கற்ற நூல்கள் அவர் களுக்கு நாள் தொறும்-நினைக்கும் தொறும்-காலந் தொறும் புதுப்புது உண்மைகளை உணர்த்திக் கொண்டே இருக்கும். நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் (373) என்றும் உலகத்தொடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலாதார்' (140) என்றும் வள்ளுவர் கூறும் நிலையினை எண்ணிச் சிலர் அறிவு வேறு, நூலைக்கற்றல் வேறு எனக்கருதுவர். அந்த எண்ணத்தை மாற்றவே கற்க கசடறக் கற்பவை' என்று வள்ளுவர் நன்கு விளக்குகிறார். வெறும் பட்டத்துக்காகக் கற்றவர்களால் தானே இன்று நாடும் உலகமும் நலிவுறுகின்றன. இவர்கள் உலக அறிவோ நூல் நயத்தன்மையோ அறியாதவர்கள் ஆவர். இந்த உண்மையினை விளக்க வள்ளுவர் இவ்விரண் டினையும் - நூலினையும் அறிவையும் - உவமையாக உலகறிந்த உண்மையாகவே காட்டி விளக்குகின்றார். கவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (783) என்று நட்பு என்னும் அதிகாரத்தில் இதை உவமப் பொரு ளாகக் காட்டுகிறார். நல்லவர் நட்பு நுனியிற் கரும்பு தின்றன்றே என்றபடி பழகப் பழக இனிக்கும் தன்மை யுடையது. பழகப் பழக அப் பண்புடையாளர் நட்பு வளர்ந்து புதுப் புது நலன்களை - உணர்வுகளை - உண்மைகளை