பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


நூலும் அறிவும் "முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதுஉம் கற்றனம் என்று களியற்க-சிற்றுளியால் கல்லும் தகரும் தகரா கனங்குழாய் கொல் உலைக்கூடத்தினால்” என நன்நெறி நமக்கு அறிவுறுத்துகின்றது. இவ்வாறே பல அறிஞரும் அறவோரும் அன்றுதொட்டு இன்றுவரை தத்தம் ஆக்கநெறி பற்றிய அறவுரைகளைத் தத்தம் நூல்களில் எழுதிக் காட்டியுள்ளனர். கல்வி, அறிவு, அவற்றின் வழியே பெறும் உணர்வு, இவற்றால் ஆய பயன் அனைத்தும் அளவிடற் கரியன. ஆயினும் உலகில் சிலர் 'முந்திரிமேல் காணி மிகினும் கீழ்தன்னை இந்திரனாப் போற்றி விடும்’ என்ற வாக்கின்படி சிறிதோ-சற்று அதிகமாகவோ கற்று விட்டால் தனக்குத் தானே நிகர்’ என்று தருக்கி வாழ்பவர் இன்று மட்டுமின்றிப் பழங்காலத்திலேயும் வாழ்ந்திருக் கின்றனர். ஆளவந்தார், மெய்கண்டார் வரலாறுகள் இந்த உண்மையினை உணர்த்துகின்றன. கல்வி ஆங்காரம் துன்பம்’ என்று குசேலர் உபாக்கியானம் கூறுவது போன்று, சிறிதளவு கற்று அகங்காரமுடையார் துன்பமே அடைவர் என்பது உலகறி உண்மை. மாந்தருக்குக் கல்வியே கண் என்பர் வள்ளுவரும் ஒளவை யும்; அக் கண் அனைவருக்கும் தேவையே. அக் கண், நூல், அறிவு என்ற இரண்டின் அடிப்படையில் அமைகின்றது என்பதை வள்ளுவர், மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' 3Fmー6