பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


புல்லறிவு புகவேண்டா - 113 என்று எள்ளிநகையாடுகிறது. இந்த அடிகளை உணர்ந்த நாம் நல்லறிவின் நெறிநின்று. 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்து சமூகத்தையும் தரணியையும் நேரிய நிலையில் வாழ வைக்க வழிகாண்போமாக! - புல்லறிவு புகவேண்டா உலகில் வாழும் மனித மனம் விசித்திரமானது. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற வேண்டும் என்று அன்று தொட்டு இன்று வரை நல்லவர்கள் கூறிவந்த போதிலும் சமதர்மச் சமுதாயம் நாட்டில் இன்னும் உருவாக வில்லை. உள்ளார் சிலர், இல்லார் பலர் என்ற நிலையே காண்கிறோம். இடையிடையே உள்ளார் இல்லார் ஆதலும் இல்லார் உள்ளார் ஆதலும் இயற்கையாக நடைபெறுகிறது, "ஆறிடை மேடும் மடுவும் போலாம் செல்வம் என்பது மூதுரை. அறிவுடைய நல்லவர்கள் உண்டான காலத்தில் உற்ற சமுதாயத்தையும் உயிரினத்தையும் ஒத்து நோக்கி, அறமாற்றி நனி சிறப்பர். உடம்பு பெற்ற பயனை அவ்வாறு உலகுக்கு அளித்த நல்லவர், பின் ஒருவேளை வறுமையுற்றாலும் அன்றி ம்றைய நேர்ந்தாலும் வாடமாட்டார்கள். நல்லறிவாளர் 'நீரில் எழுத்த்ாகும் யாக்கை என்ற நிலையறிந்து, கைத் துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்வர். இவ்லாத காலத்தும் உயிரினத்துக்கு) ஒல்லும் வகையில் உதவுவர். ஆனால் புல்லறிவாளர்? . . . ஒருசிலர் பொருளற்ற காலத்தில் நான் பொருள் பெற்றால் அதைச் செய்வேன் இதைச் செய்வேன்' என்றும் ‘சமுதாயத்துக்கு இப்படி உதவுவேன்; உயர்த்துவேன்; பொருளால் உலகை உண்பிப்பேன் என்றும் பறைசாற்றுவர்.