பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

சான்றோர் வாக்கு


114 . சான்றோர் வாக்கு ஒருசிலர் நாங்கள் பதவிக்கு வந்தால் உலகையே புன்னகைப் பூஞ்சோலை ஆக்குவோம்' என்பர். ஆனால் அவை பெற்ற பின் நிலை வேறாகும் என்பதை உலகம் அறியும். இந்நிலை யினை நாலடியார் புல்லறிவினார் செயலாகச் சொல்லுகிறது, புல்லறிவினார் இல்லாத காலத்தில், பொருளும் பிறவும் வந்தால் எல்லாம் செய்வோம் என்று பேசுவார். ஆயினும் அவர்களுக்கு எதிர்பாராது பெருஞ் செல்வம் வந்துற்றால், முன்பேசியவற்றை யெல்லாம் - மறந்து, அத்தகைய அற மாற்றும் செயலை ஓரளவும் சிந்தியார் என்ற உண்மையை நாலடியார் சுட்டிக்காட்டி, அத்தகைய புல்லறிவாளரோடு உலகில் பொருந்தி வாழ்தல் எத்துணைக் கொடுமை வாய்ந்தது என விளக்கி, சமுதாயம் அத்தகைய அற்பர்களை ஒதுக்கித் தள்ளினாலன்றி உலகம் உய்ய வழியில்லை என்பதைக் காட்டு கிறது. ஒன்றும் அற்ற வெறுமை நிலையில், மறுமைக்கு வேண்டிய அறங்களைச் செய்து, இம்மையிலும் சமுதாய வளர்ச்சிக்கு உதவி, தம்மையும் உயர்த்திக் கொள்ளும் வகையில் ஒன்றும் செய்ய வாய்ப்பில்லையே என வருந்தியவர் களாகிய புல்லறிவினார், அனைத்தும் ஆற்றக் கூடிய பெருஞ் செல்வத்தினை எதிர்பாராது பெறுவார்களாயின், ஒருசிறிதும் மிகக் குறைவான அளவிலும் உதவார் என்ற உண்மையினை 'ஐ' என்ற ஒரெழுத்துச் சொல்லாலே நாலடியார் விளக்கு கிறது. ஐ’ என்பது இங்கே சிறுமையைக் குறிக்கும் என்பர். ஒரு சிறிதளவும் உதவார் என்பதாகும். செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார், சொல்வதை அறிந்து சொல்லார், சுற்றமும் துணையும் பேணார்' என்று ஆன்றோர் சொல்லிய கூற்றுக்குச் சான்றாக இப்புல்லறிவினார்-கயவர் உலகில் உலவுகின்றனர். இவர்களை எண்ணிய நாலடியார்.