பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சான்றோர் வாக்கு


மூதுரை 'மூதுரை என்பதற்குப் பழைய உரை, பழைய சொல் அல்லது பழைய விளக்கம் எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம். முதியோர் உரை எனக் கொள்வதும் பொருந்தும், மூதுரை என்றே ஒரு நூலும் உள்ளது. மூதாட்டியாகிய ஒளவையார் உரைத்த முப்பது பாடல்களைக் கொண்ட நூலே மூதுரை என்ற பெயரால் வழங்குகின்றது. அதற்கு வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு. ஒளவையார் வயதானவரானதாலும் அவர் வாழ்க்கையில் பெற்றஅனுபவங் களைக் கொண்டே அந்தப் பாடல்களைச் செய்திருப்பதாலும் ஒவ்வொன்றும் மனித வாழ்வுக்கு ஏற்ற நீதி ஒவ்வொன்றை உணர்த்துவதாலும் அந்த நூல் மூதுரை எனப் பெற்றது. அதனைப் படிக்கின்ற-கேட்கின்ற மக்கள் அந்த நூல் கூறும் அறநெறியில் வாழக் கடமைப்பட்டவராகின்றனர். ஆம்! அந்த அறநெறி வழியே வாழ்ந்தால்தான் வையம் செம்மை யாகும். இல்லையானால்......... 7 - நாட்டில் அனுபவத்தால் முதியவர்கள் கூறும் சொற்கள் ஒவ்வொன்றும் எண்ணத்தக்கன. நன்கு படித்தவனைக் காட்டிலும் உலக வாழ்க்கையில் பட்டு, உழன்று, தெளிந்த பெரியவர்களே சிறந்தவர் என்பதனைத்தான் வள்ளுவர், 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்கின்றார். இதையே வலியுறுத்தும் வகையில் ஒளவையார் கொன்றை வேந்தனில் மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்று சுட்டி, பெரியவர்தம் வார்த்தைகளை மதித்து நடக்க வேண்டும் என வற்புறுத்துகிறார். திருவள்ளுவர் இரண்டு அதிகாரங்களில் மூத்தோர் பற்றிக் குறிக்கின்றார். பெரியாரைத் துணைக்கோடல் என்று அரசியலிலும் பெரியாரைப் பிழையாமை என்று அங்க இயலிலும் இரு அதிகாரங்கள் திருக்குறளில் உள்ளன.