பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


3 மூதுரை 119 ஆட்சி சிறக்க வேண்டுமானால் நாடாளுகின்ற அரசனானவன் பெரியாரை-முதியோரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்படியே அரசின் அங்கமாகிய அமைச்சரும், நாடும் நாட்டுமக்களும் பிறரும் பெரியாரைப் பிழையாது அவர் காட்டிய வழியில் ஒழுக வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார் வள்ளுவர். தம் இருபது குறட்பாக்களிலும் அதற்கான காரணங்களை விளக்குகிறார். சான்றாண்மை மிக்கவராகி, பிறர் தீங்கு செயினும் பொறுத்தாள்பவராகி வையம் வாழ வழிகாட்டுபவராக இருப்பவர்ே பெரியவர் என்பது உலகறி உண்மை. நாட்டில் அத்தகைய நல்ல பெரியோர்கள் வாழ்ந் தால்தான் நாடு நன்கு விளங்கும் என்பதை அரசனாகிய "கொற்கையாளி குலசேகரன், தன் வெற்றி வேற்கையில் சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் கன்றே என்று காட்டி மூத்த அறிவுடைய சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைக் காட்டிலும் குறவர் வாழும் காட்டில் வாழ்வதே சிறந்தது என்கிறார். சங்க கால்ப்புலவர் தம் நீண்ட வாழ்நாள் பெருக்கிற்கும் பிற நன்மைகளுக்கும் மூத்தோராகிய சான்றோரே காரணம் எனக் காட்டுவர். - - - - 'யாண்டு பலவாக கரையில வாகுதல் யாங்காகியர் என வினவுதிராயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் கிரம்பினர் யான் கண்டனையர் என் இளையவரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன் தலை ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' - என்று பிசிராந்தையார் என்ற புலவர் தனக்கும் தன் நாட்