பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

சான்றோர் வாக்கு


120 சான்றோர் வாக்கு டிற்கும் நலம் தரும் நல்லவர் முதிய சான்றோரே என்கின் றார். ஆம்! அவரும் ஒரு முதிய சான்றோர் அல்லவா? எனவே அறிவாலும் சான்றாண்மையாலும் வயதாலும் மூத்தோர் வாழும் நாடே சிறந்த நாடு என்பதும், அந் நாட்டில் சமுதாய வாழ்வும் தனி மனித வாழ்வும் சிறக்கும் என்பதும் தெளிவாகின்றன. தன் தலைமயிர் வெளுக்காத தற்கு மூத்தோராகிய சான்றோரே தலைக் காரணம் எனப் பிசிராந்தையார் சொல்லுகிறார் என்றால், பிற வாழ்க்கை நிலைகள் அப்பெரியோர்களால் சிறக்கும் நிலையினை விளக்கவும் வேண்டுமோ! எனவேதான் ஒளவையார் நான் முன்னமே சுட்டியபடி மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்' என்று அவர்தம் வார்த்தைகளைச் சாவா மருந்தாக்கினார். உலக நீதி பாடிய உலகநாதரும் மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம் எனக் கூறுகின்றார். ஆம்! அவர் தம் மூதுரை, வழுக்கும் தரையில் நடக்கப் பயன்படும் ஊன்று கோல் போன்று நம் வாழ்வில் வழுக்கி விழும்போது துணை நிற்கும் என்பது உறுதி. திருவள்ளுவர் இம் மூத்தோரைப் பற்றி இரண்டு அதிகாரங்கள் கூறினார் என்று மேலே சுட்டினேன். அவர் காட்டியவற்றுள் இரண்டொன்றைக் காணல் ஏற்புடைத் தாகும் என எண்ணுகிறேன். நாடாளுகின்ற நல்ல அன்றைய அரசர்-இன்று ஆளும் அமைச்சர் மூத்தோர் சொல் கேட்டு அவர்கள் காட்டும் வழியினையே பின்பற்ற வேண்டும் என்றும், அத்தகையவரை அறவோரை-முதியோரை, ஆளுவோரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் ஆட்சிக்கு நல்லது என்றும் வற்புறுத்துவார், 'அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் .