பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


மூதுரை 121 என்று"பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் சுட்டுகிறார். ஆம்! இந்தக் குறளை உள்ளத்தில் எழுதாதுஅதன் பொருள் உற்றுணர்ந்து செயல்படாத காரணத்தினால் தான் அன்றும் இன்றும் பல பேரரசுகள் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து கெடுகின்றன. இது அர்சாங்கத்துக்கு மட்டுமன்றி, தனி மனிதனுக்கும் இன்று மிகவும் பொருந்தும், ஏன்! அரசுகளை உருவாக்குவதில் ஜனநாயக முறையில் தனி மனிதன்தானே முக்கிய இடம் பெறுகிறான். அத்தகைய நல்லவர்-மூத்தோர்தம் தொடர்பை விட்டால்-அவர் சொற் கேட்டு அவர்வழி நடக்காவிட்டால் என்ன நேரிடும் என்ற கேள்விக்கு வள்ளுவரே விடை தருகின் றார். உலகில் பலருடைய பகை கொண்டால் என்னாகும் என எண்ணிப் பார்க்கச் சொல்லுகிறார். "இட்லர் போன்றார் வாழ்வை எண்ணிப் பார்க்கலாம். அந்தத் தீமையைப் பத்தால் பெருக்கிக் கொள்ளச் சொல்கிறார். பத்து' என்பது வெறும் எண்ணைக் குறிப்பது அன்று, தமிழில் தனித்து வரும் எண் வரிசையில் உச்சியில் அமைவது; இதன் பிறகு கூட்டு எண்களே. எனவே பத்து’ என்பது பலவாகக் கொள்ளும் எண்ணைக் குறிக்கும், ஆம்! அவ்வாறு பல்லோர் பகை பல மடங்கு பெருகினால் என்ன தீமை வருமோ அதனினும் அதிகமான தீமையினை, நல்லவர்-முதியவர் தொடர்பை விட்டால் நாடாளுபவர் தாமாகவே தேடிக் கொண்டு அழிவர் என்கிறார் வள்ளுவர். இது எவ்வளவு உண்மை என்பதை அன்றும் இன்றும் வரலாற்றுவழியும் நாம் கண்கூடாகவும் காண்கிறோமல்லவா! - இவ்வாறே அங்க இயலிலும் வள்ளுவர் அரசரன்றி, பிற மக்களும் அமைச்சர் போன்ற அங்கமாக உள்ளவரும் உணர்ந்து கொள்ளுமாறு பெரியாரைப் பிழையாமை' என்ற «FтRavidreamsbot (பேச்சு)8