பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சான்றோர் வாக்கு


122 சான்றோர் வாக்கு அதிகாரத்தினை அமைத்துள்ளார். அங்கே துணைக்கோடல், என்று இன்றியமையா நிலையினை நாடாளுபவருக்குச் சொல்லிய வள்ளுவர், இங்கே பிழையாதிருக்க வேண்டும் என்கிறார். அவர்தம் துணை கொள்வதோடு அவரைப் பிழையாது போற்ற வேண்டிய உண்மையினையும் வற்புறுத்து கின்றார். பெரியாரொடு-மூத்தாரோடு சேர்ந்து வாழாதவர் எவ்வளவு சிறந்தவராயினும் சிறக்க முடியாது என்பதோடு, அவர் தம் சீற்றத்துக்கு உள்ளாயின் உய்தி இல்லை என்பதையும் வள்ளுவர் வற்புறுத்துகின்றார். 'எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்; உய்வில்லை பெரியார் பிழைத்து ஒழுகுவார்’ என்றும் "இறந்தமைந்த சால்புடையார் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் என்றும் வள்ளுவர் பெரியவர்களைப் பிழைத்து வாழ நினைப் பவர் வருந்த வேண்டிய நிலையினை நன்கு காட்டுகிறார். எரியால் சுடப்பட்டாலும் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால் முதியோர்தம் மூதுரை கொள்ளாது பிழைபடின் பிழைக்க வழி இல்லை என்பதோடு, தாம் எவ்வளவு சிறந்த பதவியில்-அரச வாழ்வில்-செல்ல நிலையில் உயர்ந்திருந்தாலும் பெரியார்சிறந்தமைந்த செம்மையாளர் கோபத்துக்கு ஆளானால் பிழைக்க முடியாது என வற்புறுத்தி மூதுரை வழி நடக்க வழிகாட்டுகிறார். - மூதுரை என்பது பற்றி முதலிலேயே விளக்கினேன். தமிழில் மூதுரை என்ற வாக்குண்டாம் ஒளவையாரால் செய்யப்பெற்றதோடு மூதுரைக்கு விளக்கமாக அமைந்த பழ மொழி' என்ற நூல் ஒன்றும் உண்டு. சங்க இலக்கியங்களுள்