பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

சான்றோர் வாக்கு


வெஞ்சொலும் பொய்மையும் வேண்டா மனிதன் மனிதனாக வாழ எத்தனையோ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுங்காலத்து, எந்த நெறியில் நின்று வழி பட்டால் இறையருள் கிட்டும் என எண்ணிப் பார்க்கின்றனர். சமயத் தொண்டர்கள், வரும் துன்பங்களை யெல்லாம் புன்முறுவலோடு ஏற்று-தேவையாயின் அவற்றால் வாடி, பின் உளங்கலங்கா நிலையில் நின்று உலகில் அறம் காட்டி உயர்ந்து பின், சமயத் தலைவர் எனச் சமுதாயத்தால் போற்றப் பெறுகின்றனர். அவர்கள் காட்டிய அறம் பற்றிய தெய்வ நெறியைச் சமுதாயம் பின்பற்றுகிறது. தமிழ் நாட்டில் சைவம் வளர்த்த பெருமை தேவாரம் பாடிய மூவரைச்சாரும். ஊர்தோறும் சென்று, மக்களொடு மக்களாய்ப் பழகி, அவர்தம் வாழ்வைத் தம் வாழ்வாக எண்ணி, அம்மூவரும் சமுதாயத்துக்குரிய அறநெறிகளை ஆங்காங்கே தத்தம் தேவாரப் பதிகங்களில் சுட்டிக் காட்டி யுள்ளனர் அம்மூவரும். மனிதவாழ்வுக்கு இறைவழிபாடு இன்றியமையாதது என்பதுடன் நில்லாது, இந்த இறைவழி பாட்டிற்கு வேறு சிலவும் இன்றியமையாதன என்கின்றனர். பெரிய காவியங்களும் கதைகளும் அந்த உண்மைகளைத் தத்தம் பாத்திரங்களின் மூலமும் அவற்றின் வாக்கின் மூலமும் காட்டுகின்றன. தேவாரம் பாடிய மூவரும் அந்த வகை யிலன்றி நேராகவே கடவுள் நெறிக்கு இன்னின்ன தேவை - இன்னின்ன விடத்தக்கன என வற்புறுத்திக் காட்டுகின்றனர். அவற்றுள்ளே இன்று இரண்டினைக் காண்போம். இன்சொல் இளிதீன்றல் காண்பான் எவன் கொலோ வன் சொல் வழங்குவது என வள்ளுவர் வினா எழுப்பி, கேட் பார்தம் சொந்த அனுபவத்தைச் சுட்டி, இன்சொல் இன்றேல் வாழ்வு சிறக்காது என வலியுறுத்திக் காட்டியுள்ளார். அப்பர