பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


வெஞ்சொலும் பொய்மையும் வேண்டா 125 டிகளார் ஏழாம் நூற்றாண்டில் எத்தனையோ சமயமாறு பாடுகளுக்கிடையே எல்லையற்ற துன்பத்தை அனுபவித்து, கசிந்து கசிந்து உருகிப் பாடியவர். அவர் தம் துன்பத்துக்கு அஞ்சாது வாழ்ந்து, 'என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்" என்றும் அஞ்சுவது யாதொன்றும் இல்லை’ என்றும் பாடியவர். அவர் அத்தனைத் துன்பங்களுக்கும் இடையில் வெஞ்சொல் விளம்பினார் என்று காட்ட இயலாது. என எண்ணுகிறேன். அப்படியே தனக்குக் கொடுமை இழைத்த பாண்டியனிடம் தான்பெற்ற வெம்மை'யை எரியை சம்பந்தர், பையவே சென்று பாண்டியற் காகவே' என மெல்லச் செல்லுமாறு அன்பால் ஆணையிடுகிறார். அவர்கள் யாவரும் இறையருள் பெற்றவர்கள், இறைவனை அடைய வேண்டுமானால் "வெஞ்சொல் விலக்கப்பட வேண்டும் என உணர்ந்தவர்கள். அப்பரடிகள் அதை விளக்கமாக, ,வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற' எனக் காட்டுகிறார். மேலும், உலகில் வாழவும் இன்சொல் இன்றியமையாதது என்பதனை வாக்கினால் இன்புரைத்து வாழ்கிலார்’ எனச் சுட்டிக் காட்டுகிறார். சம்பந்தர், இயமன் தூதுவர் உட்பட யாரையும் இன்சொலால் வெல்லலாம் என்ற உண்மையினை 'இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால், நயம் வந்தோத வல்லார் தமை நண்ணினால் என்று பாடுகிறார். எனவே வாழ்வுக்கு-நல்வாழ்வுக்கு இன்றியமையாதது இன்சொல் என்பது தேற்றம். பொய்யா நெறியும் அத்தகையதே. இதுபற்றியும் பாடாத புலவர் இல்லை. பொய் நீங்கினாலன்றி, வேறு எத்தகைய வழிபாட்டாலும் இறைவனை அடைய முடியாது என்ற உண்மையினைச் சுந்தரர் அடிகள் காட்டுகின்றன. 'பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்துள்ளே, மெய்யே நின்றெரியும் விளக்கொத்த தேவர் பிரான் என்பது அவர் வாக்கு. ஆம்! பொய்யாது அவன்புகழ்பாடின் அவ்விறைவன்