பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சான்றோர் வாக்கு


126 - சான்றோர் வாக்கு அவ்வாறு பாடுவார் உள்ளத்து ஒளிவிளக்காக அமைவான். அப்பரடிகளாரும், பொய்யனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை என்று சுட்டி, எல்லாவகையான பொய்மை களையும் கைவிடின் இறைவன் அத்தகையோர் உள்ளங்களில் ஒளிவிடுவான் என்கிறார். மேலும் பொய்யர் வீண் காலம் போக்கி வாழ்க்கையை வீணாக்குவர் என்ற உண்மையினை, பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே' எனச் சுட்டுகிறார். எனவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும் மறுமையில் இன்பம் பெற்று இறையருள் துய்ப்பதற்கும் வெஞ்சொல் நீக்கமும் பொய்மை நீக்கமும் இன்றியமையாதன என உணர்ந்து, இன் சொல் பேசி வாய்மையினைக் கடைப்பிடித்து வாழ்வோமாக! தாயுமானவர் தமிழகத்தின் நடுவிலே காவிரிக்கரையிலே உள்ள திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலில் வீற்றிருந்தருளும் இறை வனுடைய பெயர் தாயுமானவர் என்பதாகும். ஒரு பெண்ணின் மகப்பேற்றுக்கெனத் துணைபுரிய வந்த தாய் வரமுடியா வகையில் காவிரியின் வெள்ளப் பெருக்கு தடை செய்ய, இந்த இறைவனே தாயாகச் சென்று மகப்பேறு கண்டு துணை செய்து தேற்றி வந்தமையால் இவ்விறைவனுக்குத் "தாயுமானவர் எனப் பெயர் வந்ததாகத் தலபுராணம் கூறும், திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் உள்ள இவ்விறை வனிடம் பற்றும் பாசமும் பக்தியும் கொண்டவர்கள் தம் பிளளைகளை அப்பெயரிட்டு அழைப்பர்! அத்தகைய முறையில் வந்தவரே மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து தெய்வ இலக்கியம் பாடிய தாயுமானவராவர்.