பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


தாயுமானவர் 127 சோழ நாட்டிலே திருமறைக்காடு எனும் வேதாரணியத் தில் வாழ்ந்த சைவ வேளாளர் மரபினைச் சார்ந்த கேடிலியப் பப் பிள்ளையின் மகனார் தாயுமானவர். பிள்ளை அவர்கள் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய காரணத்தால் அக்காலத்தில் திருச்சியில் ஆட்சி புரிந்த விஜய இரகுநாத சொக்கலிங்க நாயக்கர் அவரை அழைத்து, தம் அரசாங்கத் தில் பெருங்கணக்கராக அமைத்துக் கொண்டார். பிள்ளை யவர்களுக்குச் சிவசிதம்பரம் என்ற மகன் பிறந்த போதிலும், அவரை மகப்பேறு அற்ற தம் தமையனாருக்குத் தத்தாகக் கொடுத்து விட்டார். பின் திருச்சியில் தாயுமானவரை மகப் பேறு வேண்டி வழிபட்டபின் மற்றோர் ஆண் குழந்தை பிறக்க, அதற்குத் தாயுமானவர் எனப் பெயரிட்டார். தாயுமானவர் இளமையிலேயே கலை பல கற்று வட மொழியிலும் தமிழிலும் வல்லவராயினார். தந்தைக்குப்பின் இவர் அரசப் பணியில் இருந்தாரேனும், அவர் உள்ளம் இறைவன்பால் ஈர்க்கப்பெற, தனக்கு வழிகாட்ட ஞான குருவைத் தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திருமூலர் மரபில் வந்த மெளனகுரு தேசிகரை ஒருநாள் இவர்காண அவரைப் பற்றிக் கொண்டு அவர் சீடராகி, மெய்யறிவும் யோக நிலையும் வளரப் பெற்றார். ஆசிரியரைப் பற்றி, 'மெளனகுரு வணக்கம்' என்ற பதிகமும் பாடியுள்ளார். அதில் தம் குரு திருமூலர் மரபில் வந்தவர் என்பதைக் குறித் துள்ளார். இவர்தம் யோக நிலை அறிந்த அரசனும் இவர் வழியே ஆவன செய்தானாயினும், அவன் சிலநாளில் மறைய, இவர் அங்கிருந்து தம் மாணவர் குழாத்துடன் புறப்பட்டு இராம நாதபுரம் அடைந்தார். தம் தமையனார் சொற்படி தமக்கு மணவாழ்வில் விருப்பின்றேனும், மட்டுவார் குழலி' என்ற மங்கையை மணந்து, சிலநாள் இல்லற வாழ்வில் இருந்து கனகசபாபதி' எனும் மகனையும் பெற்றார். பின் மனைவி 'மறைய தூய துறவறத்தை மேற்கொண்டார்,