பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

சான்றோர் வாக்கு


128 சான்றோர் வாக்கு பின் திருச்சிராப்பள்ளி மெளனகுரு மடத்தைச் சார்ந்து, கி.பி. 1644ம் ஆண்டு முதல் அதன் தலைவராக இருந்து ஞான தீட்டையுற்று. இறுதியில் இராமநாதபுரம் சென்று. அங்கு கி.பி. 1662 தைத் திங்கள் 28ம் நாள் விசாகத்தன்று இறை நிலையுற்றார். அவர் சமாதி அடைந்த இடத்தில் சமாதி ஒன்றும் மறைந்த நாள் குறித்த கல்வெட்டு ஒன்றும் உண்டு என்பர். (இவ்வரலாறு சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக 1966ம் ஆண்டு வெளியீட்டிலிருந்து தொகுக்கப் பெற்றது) இவர்தம் படல்கள் உயர்ந்த தரத்தன. சிறப்பாகச் சைவ சமயத்தின் அடிப்படையில் இவர் பாடல்கள் அமையினும் சமரச நோக்குள்ளவையாகவும் வேதாந்த சித்தாந்த கருத்துக் கள் அமைந்தனவாகவும் பல பாடல்கள் உள்ளன. இவர்தம் பாடல் தொகுப்பில் அமைந்த முதற்பாடலாகிய அங்கிங் கெனாதபடி என்ற பாடலே இவர்தம் சமரச உணர்வுக்கு எடுத்துக்காட்டாக அமையும். பலபாடல்கள் இறைவனைப் பற்றியன வாயினும் மலைவளர் காதலி' அகிலாண்ட நாயகி’ 'பெரிய நாயகி போன்ற பதிகங்கள் உமையம்மையாரைப் பற்றியனவாகவும் அமைகின்றன, இரண்டு அடிகளாலாகிய கண்ணிகள் பல இவர் இயற்றியுள்ளார். 'பராபரக்கண்ணி' அனைவரும் எளிமையில் படித்தறிந்து கொள்ளத்தக்கது. அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே (பராபர 155) போன்றவை அவர்தம் எளிமைக்குச் சான்றாவன. இவர் ஐம்பத்தாறு தலைப்புகளில் பலவகைப் பாடல் களைப் பாடியுள்ளார். சில உயர்ந்த தத்துவக் கருத்துக் களைக் கொண்டவை. சில பாடல்கள் சித்தாந்தம் வேதாந்தம் என்ற இருவகையிலும் பொருள்கொள்ள அமைவன. இவர்தம் பாடல்களைத் திருவாசகத்துக்கு அடுத்துத் தமிழ் நாட்டவர் போற்றிப் பரவுவர்.