பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 129 சைவத் தமிழ் இலக்கியங்களுள் மிகச் சிறந்த ஒரு சிலவற்றில் இவர்தம் பாடல்களும் இடம் பெறும். அதே போல சைவ அடியவர் வரிசையிலே தாயுமானவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர்தம் பாடல்கள் காலம் கடந்து வாழும் என்பது உறுதி. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 'ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு & & a 4 + 4 & .... குன்றாத செல்வன்’ என்று இறைவனைக் குறிக்கின்றார் மணிவாசகர். ஆம்! இறைவன் ஒருவன், அவனை வழிபடும் வழிகள் பல. இந்த உண்மையினை அவரே, தென்னா டுடைய சிவனே போற்றி எங்காட் டவர்க்கும் இறைவா போற்றி’ என விளக்குகின்றார். "நான் உன்னைச் சிவன்' என்ற பெயரால் அழைக்கின்றேன். ஆனால் உலகில்-எல்லா நாடு களிலும் அவரவர் வணங்கி வழிபடும் முறையின் இறைவனாக நீ இருக்கின்றாய்” என்கின்றார். இந்த உண்மையினை உணராத காரணத்தினால்தான் நம் நாடு சமயத்தால் பிளவு பட்டதோடன்றி இன்றும் சமயத்தின் பேரால் இங்கே மாறாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. மனிதன் நின்று, எண்ணி, செயலாற்றக் கடமைப் பட்டவன். அவ்வாறின்றி மனம் போன போக்கில் மதி இழந்த நிலையில்தான் வேறுபாடுகள் தோன்றுகின்றன. மனித நேயமும் ஒருமைப்பாட்டு உணர்வும் அறம், நட்பு இவற்றைக் கொண்டொழுகும் வாழ்வும் தேவை என்பதை நம் சான்றோர் ஒருவர் மனத்துக்கு உபதேசமாகக் காட்டுகிறார்.