பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சான்றோர் வாக்கு


130 சான்றோர் வாக்கு 'ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு, உயர் செல்வம் எல்லாம் அன்றென்றிரு, பசித்தோர் முகம்பார், வல்அறமும் நட்பும் நன்றென்றிரு, நடுநீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கே உபதேசம் இதே' என்று தெய்வம் உண்மையினையும் அது ஒன்றே என்பதையும், பிற செல்வங்களை நம்பி வேறுபாடாகாத நல்வாழ்வும் ஏழைக்கு இரங்கும் உளமும், அறமும், நட்பும் இவையாவும் வேண்டப் படுவன என்றும் காட்டி மனத்தின் வழியே மனிதரை ஆற்றுப் படுத்துகிறார். ஆம்! இந்த ஒரே தெய்வ உணர்வு உள்ளத்து அரும்புமானால் பிற வேறுபாடுகளும் மிருக உணர்வுகளும் காழ்ப்பும் கசப்பும் உலகில் இல்லையாகும். நாடு இந்த உண்மையை உணரும் நாளே உண்மையில் விடுதலை பெற்ற நாளாகும். திருமூலரும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று கூறியதையும் இங்கே நினைவு கொள்வோம். இன்றைய நிலையினை அன்றே எண்ணிய ஆன்றோர்கள் இவ்வாறு வேறுபட்டவர்கள் இறைவனைக் காண மாட்டார் கள் என்றே கூறுவர். 'அரனதிகன் உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப் பரகதி சென்றடை வரிய பரிசே போல்’ என்று தெளிந்த உண்மையை உவமையாகக் காட்டுகிறார் கம்பர். அன்று நாட்டில் வாழ்ந்த சைவ, வைணவ சமய அடிப்படையில் இது அமையினும் எல்லாச் சமயங்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு வேறுபாடு கற்பித்து வாழும் மாக்களைக் கம்பர் அறிவிலார் என்கிறார். அத்துடன் அவர்களுக்குப் பரகதி கிடையாது என்கிறார். இந்த உண்மையினையே வேற்றுச் சமயத்தில் பட்டுழன்ற அப்பர் ‘இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிநது ஈசன் திறமே பேணிக் கவராதே தொழு மடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”