பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 131 என்று காட்டி, இந்தச் சமய வேறுபாட்டவால் தன் தெய்வம் உயர்ந்தது, என் தெய்வம் உயர்ந்தது என்று மயங்கி வாழும் மாக்கள் உள்ளத்தில் இறைவன் புக மாட்டான் என்றும், வேறு பாடு இன்றி இறைவனைப் போற்றுபவர் உள்ளத்திலேயே இறைவனைக் காண முடியும் என்றும் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே விளக்கியுள்ளார். பெரியபுராணத்துள் கல்லால் அடித்த வேற்றுச் சமயத்தவராகிய சாக்கிய நாயனா ருக்கு இறைவன் வீடு பேறு அளித்த வரலாற்றை இங்கே எண்ணலாம். எனவே இவ்வாறு காழ்ப்பற்ற பண்பட்ட உலகில் இன்று வேறுபாட்டைக் காண்கின்றோமே. இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாயுமானார் இன்றைய நிலையை எண்ணித்தான் போலும் அங்கிங் கெனாத படி எங்கும் நிறையும் இறைவனைத் தன் தெய்வம் என் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது என்கின்றார். ஆம்! இன்று உச்சநீதிமன்றம் வரையில் சென்று என் தெய்வமா-உன் தெய்வமா' என்று வழக்கிடுவதைக் காண்கின்றோமே! இன்றைய பரந்த பாரதத்தில் வாழும் நாம் இந்த வேறு பாடுகளை மறந்து மேலே கண்டபடி பல சான்றோர்கள் காட்டிய வாய்மொழிகளையே ஒளி விளக்கங்களாகக் கொண்டு, ஒன்றே தெய்வம் என்ற உணர்விலே ஒன்றிய செயலிலே, வேறுபாடற்று வினையாற்றுவோமே யானால் நாடும் நானிலமும் நலம் பெறும். அத்தகைய உள ஒற்றுமை பெற்றுச் சேர வாரும் செகத்தீரே" என அனைவரையும் அழைத்து அமைதி பெறுகின்றேன். வாழ்க சமரசம். வளர்க ஒருமை உணர்வு.