பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சான்றோர் வாக்கு


உயிர்களை ஒத்து நோக்குக பிறவிகளுள் சிறந்தது மானிடப்பிறவியாகும். 'அரிதரிது மானுடராகப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவையார். இந்த மனிதப் பிறவியில்தான் சென்றதையும் வருவதையும் சிந்தித்துச் செயல்புரியும் ஆற்றலை அவன் பெற்றுள்ளான். அவன் அவ்வாறு செயலாற்றும் திறத்தினாலேயே தன்னைத் தான் உயர்த்திக் கொள்ளவோ அன்றி தாழ்த்திக் கொள்ளவோ முடிகின்றது. மனிதனுடைய செயலே அவனை உலகில் நிலை பெற்று வாழவும் அன்றி நிலை கெட்டுத் தாழவும் செய்கிறது. மனிதன் தான் வாழும் சுற்றுச் சார்பினால் தன் வாழ்வை யும் செயலையும் பிறவற்றையும் அமைத்துக் கொள்ளுகிறான். மனிதன் அத்தகைய நிலையில் சில வேளைகளில் விலங்கா வதும் உண்டு. திருவள்ளுவரும் பிற அறங்கூறும் அறிஞர் களும் மனிதன் செய்யலாகாத செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதோடு, அவற்றால் விளையும் பயன்களையும் தொட்டும் விளக்கியும் காட்டியுள்ளார். அப்படியே அறத்தாறு இது என விளக்கி, இவற்றைச் செய்யின் நாட்டிற் கும் உலகுக்கும் நன்மை உண்டாவதோடு, அச்செயலாற்றும் மனிதனுக்கும் நற்பெயரும் புகழும் பிற நலன்களும் உண்டாகும் என்றும் காட்டியுள்ளனர். ஆயினும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை எண்ணிப் பார்த்து, நல்லதைச் செய்து, அல்லதை விளக்க முற்படுவதில்லையே. அதனாலேயே வீட்டிலும் நாட்டிலும் ஊரிலும் உலகிலும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் சண்டைகளும் போர்களும் உண்டாகின்றன. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தாயுமானவர் சொற்படி-எண்ணப்படி எல்லாரும் வாழ நினைப்பார்களாயின்- வாழ்வார்களாயின் வீடும் நாடும் ஊரும் உலகும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்குமன்றே ா 'ஆயினும் மனிதன் அந்த நிலையில் இல்லையே!