பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


உயிர்களை ஒத்து நோக்குக 133 தன் செயல் நாட்டையும் மற்றவர்களையும் பாதிக் கின்றது என்பதோடு தன்னையும் பாதிக்கின்றது என்பதை மனிதன் உணருவதில்லை. உலகம் உள்ளளவும் வாழ்கின்றவர் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே இருக்க, அல்லார் பலராக உள்ளமைக்குக் காரணம் மனிதன் மாற்று வழியே செல்கின் றான் என்பதைத் தானே காட்டுகின்றது. நின்று நினைத்துப் பார்த்து, தன் நிலை உணர்ந்து, ஒழுக்கமுடன் நடப்பானா யின் அவன் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வான்' என்பது உறுதி. . ‘நன்னிலைக் கண் தன்னை கிறுப்பானும் -தன்னை நிலை கலக்கிக் கீழ் இடுவானும்-தன்னை மேன் மேல் உயர்த்தி நிறுப்பானும்-தன்னைத் தலையாகச் செய்வானும் தான்’ என்ற அறிஞர் வாக்குப்படி தன் உயர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் தானே காரணம் என்பதை மனிதன் உணர்ந்தால் நல்லதுஆனால் உணர்ந்தால் தானே! எப்படியாவது வாழ வேண்டும் என்ற நினைவில் செய்யாதன செய்து, வஞ்சமும் பொய்யும் வழக்காறாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒருவன்-ஒருவேளை அந்தக் காலத்தில் நன்றாக வாழ்பவனாகக் காணப் பெறினும், அவன் வாழ்வு வற்றிய மர வாழ்வாக-அடிவேரற்ற அல்லல் வாழ்வாக அன்றோ அமையும். அவன் நிலை கெடின், அதே வேளையிலும் சாவுக்குப் பின்னும் அவனை மதிப்பார் யார்? எண்ணுவார் யார்? அவன் அவல வாழ்வு அவனோடு முடிந்து மறைந்த ஒன்றுதானே! - ஆனால் ஒருவன் மனித உணர்வோடு, உலக உயிர்களை ஒத்து நோக்கி நல்லன செய்து, நலம் புரிந்து அறங்காத்து, வழுவாத வாழ்க்கை நடத்துவானாயின் அவன் வாழும் காலத்தும் பிறகும்-ஏன்-உலகம் உள்ளளவும் போற்றப்படு