பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சான்றோர் வாக்கு


134 சான்றோர் வாக்கு வாணன்றோ! இதனாலேயே நான் மேலே காட்டிய பாடல் எழுந்தது. தன்னைத் தலையாகச் செய்து- என்றும் வாழ விரும்பும் ஒருவன் எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணி', அருளறம் பூண்டு, தெய்வ உணர்வும் தெளிந்த சிந்தையும் உடையவ னாகி, வையம் வாழத் தான் வாழும் வழுவிலா வாழ்க்கை வாழ்வானாயின் அவனை உலகம் தெய்வத்துள் வைத்துப் போற்றுமன்றோ! அதனால் இன்று உலகில் வாழும் நாம் அல்லன நீக்கி, அறம் போற்றி, நல்லன செய்ய முற்படுவோ மானால் நாடும் உலகமும் சிறப்பதோடு, நாமும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வோமே. அத்தகைய தெய்வ வாழ்வினைவாழ்வாங்கு வாழும் வாழ்வினை, நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற உணர்வோடு கலந்த வாழ்வினை மேற்கொண்டு சிறக்க வேண்டும். நலம் செழிக்க நல்ல வழி உலகம் இன்பச் சோலையாக வாழ வழி வகுத்தவர் சிலர். எல்லாரும் வாழ வேண்டும் என எண்ணிச் செயலாற்று பவர் சிலர். ஒருசிலர் வாழ இன்னின்ன முறைகளைக் கைக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துவர். கடவுளை வணங்கு பவர்களே யாயினும் வாழ்க்கைக்குரிய நற்பண்புகள் இல்லை யானால், அவர்கள் கடவுளால் விரும்பப் படாதவர்கள் என்பர் பெரியோர். 'பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை என்பர் அப்பர். எனவே மனித நேயத்தோடு-அனைவரையும் ஒத்து நோக்கும் உணர்வோடுஎவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் என்று எண்ணி யாருக் கும்- எதற்கும் தீங்கு செய்யாத நிலையில் வாழ்தலே மனிதப் பண்பாவதோடு கடவுளை அடையும் வழியுமாகும்,