பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


് ു •ർ ി 135 கொடுத்தல் அறம்; ஆனால் வாங்குவது மாறுபட்டது. 'ஏற்பது இகழ்ச்சி என்று கூறிய பின் ஒளவையார் 'ஐயமிட்டுண் என்கிறார். எனவே நாம் பிறனிடம் ஈ எனக் கேளாது, மற்றவர் கேட்க நாம் வழங்குதலே மனிதப் பண்பாடு. இந்த நிலை நாட்டில் மலர்ந்தால் கொடுப் போர்க்கு இரப்பார் இல்லாத நிலை நாட்டில் சிறக்கு மன்றோ! அடுத்து, பிறர் பொருளை விரும்பாத பெருஞ் செயலே மனிதனுக்கு வேண்டுவது. "அவா என்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பினும் வித்து’ என்பார் வள்ளுவர். மெய் உணர்வு பெற்று, உள்ளதை உள்ளவாறு உற்றுணர்ந்து, போலியால் மயங்காது பெறும் உள உரமே மானுடர்க்கு இன்றியமையாதது. இன்று எல்லா வகையிலும் போலி'கள் மலிந்துள்ள உலகில் வாழும் மனிதன் மிக்க எச்சரிக்கையோடு வாழக் கடமைப் பட்டிருக்கிறான். இந்திய நாட்டு மக்கள் போலி வாழ்வில்-புற நிலை மயக்கத்தில்மாறுபட்ட கலப்பில் இன்று மயங்கியதாலேயே நாட்டில் பல குழப்பங்கள் நிகழ்கின்றன. எனவே மெய் உணர்வு மனித வாழ்வுக்கு இன்றியமையாதது. மேலும் இந்த மனநிலை உண்டாயின் பிறரைத் தீங்கு சொல்ல அம்மனம் நினையாது. பிறரைச் சி என்றும் நாயென்றும் பேயென்றும் பேசத் துணியாது. முதலில் மனிதன் வாக்கால் வரும் தவறுகளை நீக்க முற்பட வேண்டும். இந்த நிலையெல்லாம் எப்பொழுது உண்டாகும்? உள்ளம் தூய்மையாகவும் வாய்மை உடையதாகவும் இருந்தாலன்றி இவை அனைத்தும் கூடாதனவாகும். ஆகவே "எதுவரினும் வருக அல்லது எது போயினும் போக’ என்ற உணர்வில், உள்ளத்தே வாய்மையும் தூய்மையும் கொள்ளல் இன்றிய மையாதது. இந்த உண்மையைத் தான் பரந்த பாரத நாடு "வாய்மையே வெல்லும் என்று தன் தாரக மந்திரமாககுறிக்கோளாகக் கொண்டுள்ளது. மற்றவர்க்குத் தீங்கு