பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சான்றோர் வாக்கு


i86 சான்றோர் வாக்கு பயவாத வாய்மை ஒருவருக்கு அமையுமானால் அவர் உள்ளம் தூய்மையாகும். அந்தத் தூய உள்ளத்திலே சாதி வேறு பாடோ, சமய வேறுபாடோ, நீதி வேறுபாடோ, மொழி வேறுபாடோ, நிற வேறுபாடோ பிற வேறுபாடுகளோ இல்லையாகும். ஆம்! அந்த உள்ளத்திலேயே ஆண்டவன் என்றும் குடி கொள்வான். அவ்வுள்ளமே சமரச ஞானம் கொள்ளும் உள்ளமாகும். இந்த உள்ளம் மனிதரிடை மலரின் உலகம் வாழ வேறு என்ன வேண்டும்? இவற்றையெல்லாம். எண்ணிய சமரச ஞானியராகிய அருட் பிரகாச வள்ளலார், சென்னை கந்த கோட்டத்து இறைவன் முன் நின்று, தான் அவனை என்றும் மறவா நிலையும் அவன் தன்னை என்றும் கைவிடா நிலையும் வேண்டி அந்நிலை பெற இவற்றை யெல்லாம் வேண்டித் தவம் கிடக்கிறார். இதோ அவர் வாக்கு. 'ஈயென்று நானொரு வரிடநின்று கேளாத இயல்பும். என்னிட மொருவரீது இடுவென்ற போதவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும், இறையாம் நீயென்றும் எனைவிடா நிலையும், என்றும் உன் நினைவு விடா நெறியும், அயலார் - நிதியொன்று நயவாத மனமும், மெய்ந் நிலை என்றும் நெகிழாத திடமும், உலகில் சீயென்று,பேயென்று நாயென்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவும், திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திருவடிக்கு ஆளாக்குவாய். தாயொன்று சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்த வேளே. தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே’ என்கிறார் வள்ளலார், ஆம். வள்ளலார் வாக்கைப் பின்பற்றி வாழின் நலம் செழிக்கும், வாழ்வு மலரும், நாம் நலம் பெறுவோம் என்று கூறி அமைகின்றேன். வணக்கம்!