பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சான்றோர் வாக்கு சமுதாயத்துக்கு ஒரு வார்த்தை. எவ்வளவுதான் செல்வச் செழிப்புடன் இன்றைய சமுதாயம் வாழ்கிறது என நினைத்தாலும் மனிதத்தன்மை அற்றதாகவே அது இருக்கிறது. மனிதனாக வாழ வேண்டியவன், மிருகமாகவோ வேறாகவோ மாறி, தான் தான் என்ற தனி நிலையில் செழிக்க நினைக்கிறான். அதனாலேயே வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு போரும் பிணக்கமும் நிகழ்கின்றன. அண்ணன் தம்பி, கணவன் மனைவி, தாய் மகன் என்ற உறவும் இல்லாமல் வெறும் மிருக வாழ்வாக அவன் வாழ்வு அமைகின்றது. வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால், சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகை இருக்கும்’ என்று பாரதிதாசன் கூறியபடி ஒவ்வொரு மனிதனும் பேதப்பட்டு வாழ்கின்றான். தான் எப்படி வாழ்வது என்பதை மறந்து, மற்றவரை எப்படித் தாழ்த்தலாம்-வதைக்கலாம்-மாய்க்கலாம் என்றே திட்ட மிடுகிறான். இதனாலேயே நாடுதொறும் குமுறலும் குழப்பமும் உண்டாகின்றன. நாடாளுகின்றவர்களும் நல்ல முறையில் மக்களைச் செலுத்த வழிவகுப்பதில்லை. தனி மனிதன் ஆதிக்கம்தானே எந்த நாட்டிலும் தலை தூக்கி நிற்கின்றது. எனவே மிருக உணர்வு கொண்ட தனி மனித ஆட்சியைத்தானே காண முடியும். 'மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி என்ற பழமொழிப்படி மக்களும் நிலை கெடுகின்றனர். வாழ்வில் எப்படியாவது தான் மட்டும் முன்னேற வேண்டும் என் ஒவ்வொருவனும் முயல்கிறான். அதனால் தகாத வழியில் இலஞ்சமும் பிற கொடுமைகளும் நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. பாரத நாட்டில் பழைய ஆட்சியே மேல் எனப் பலர் நினைத்துப் பேசும் அளவிற்குப் பூசல், பொறாமை, கொலை, இலஞ்சம், கொள்ளை பிற எல்லாக் கொடுமைகளும் நிகழக் காண்கிறோம். உலக நாடுகள் முழுவதிலும் இந்நிலைதான். இந்த அவல நிலையைப் போக்க வழியில்லையா! ஏன் இல்லை?