பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் 15 வீடுதோறும் பெரியவர்களை இணைந்து வாழ விட்டு, அவர் தம் சொற்படி, பின் உள்ளவர் கேட்டு நடக்க வேண்டியது முதற்படி, அப்படியே நாடுகளும். அதனாலே தான் வள்ளுவர் பெரியாரைத் துணைக்கோடலை அரசிய லுடன் சார்த்தினார். தனி மனிதன் கெட்டால் அவலம் சிறிதாகும். அரசு கெட்டால் நாடே அழியுமல்லவா! எனவே, முதிர்ச்சி பெற்ற சான்றோரைத் துணைக்கோடலில் உண்டாகும் நன்மையினையும் அல்லா விட்டால் விளையும் தீமையினையும் இருபது குறட்பாக்களால் விளக்குகிறார் வள்ளுவர். 'மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர் இனகலம் ஏமாப் புடைத்து' ダ (குறள் 485) என்றும், - 'அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்” (குறள் 441) என்றும், நல்ல முதியவர்தம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை யினை வற்புறுத்தி, . 'பல்லார் பகைகொளினும் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” (குறள் 450) என்றும், - 'எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்' (குறள் 896) என்றும் அத்தகைய மூத்தோர் தொடர்பு இன்றேல் உண்டாகும் தீமையினையும் சுட்டிக் காட்டுகின்றார். வையத்துவாழும் மக்கள் அனைவரும், அரசுகளும் இந்த உண்மைகளை உணர்ந்து, தம்மிற் பெரியார் தமராய் ஒழுகி, அவர்களை ஆதரித்து, அவர்கள் வழி ஒழுகின் நாடும் உலகும் நலமுறும். மக்கள் மாசு நீங்கப் பெறுவர். அந்த