பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சான்றோர் வாக்கு நன்னாளுக்கு அடிகோலி, ஆக்க நெறி வகுத்து-நாட்டையும் உலகையும் நல்லதாகும் நெறி வகுத்து, இந்த அனைத்துலக ஒய்வாளர் பெருமாநாடு வழி காட்டுவதாக இத்தகைய பெரியார் வழி அறிந்து வாய்மொழி போற்றி வையம் வளம் பெற்று வாழ்வதாக! வினை செயல் வகை உலகில் தோன்றும் உயிர்கள் அனைத்தும் வினைவயப் பட்டவையே. ஒவ்வோர் உயிரும் ஏதேனும் வினையைச் செய்து கொண்டேதான் இருக்கும். அறிவறிந்த மனிதன் தான் செய்யும் வினைகளுக்குக் காரண காரியங்களைக் கற்பித்துக் கொள்வான். பிற உயிர்கள் ஆற்றும் வினை களுக்கும் காரணங்கள் இல்லாமல் இரா. மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு வினையினையும் எண்ணி, ஆய்ந்து செய்யக் கடமைப்பட்டவனாகின்றான். ஒவ்வொரு வினையும் மனித சமுதாயத்தை மட்டுமன்றி உயிரினத்தையே பாதித்துக் கட்டுப்படுத்துமாதலால், அவ்வினை செய்யுமுன் எண்ணல் இன்றியமையாதது. வினை என்பது தொழிற் பெயர். வள்ளுவர் இவ்வினை பற்றிய கருத்தினை மூன்று இடங்களில் சிறப்பாகவும் பிற விடங்களில் குறிப்பாகவும் காட்டியுள்ளார். இல்லற இயலில் 'தீவின்ை அச்சம் (21) என்ற அதிகாரத்தாலும், அரசியலில் தெரிந்து செயல் வகை (47) தெரிந்து வினையாடல் (52) "ஆள்வினை உடைமை (62) என்ற அதிகாரங்களாலும் அங்கவியலில் வினைத்துய்மை (66), வினைத்திட்பம் (67), வினை செயல்வகை (68) என்ற அதிகாரங்களாலும் வினை பற்றிக் காட்டியுள்ளார். இந்த மூன்று இயல்களில் அமைந் தாலும் வினையும் அதனால் விளையும் பயனும் எல்லாருக்