பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சான்றோர் வாக்கு அறிவினுள் எல்லாம் தலை என்ப (203) இலன் என்று தீயவை செய்யற்க (205) 'எனைப்பகை உற்றாரும் உய்வர்' (207) என்ற குறட்பாக்களால் பல வாழ்வியல் கருத்துக்களை வள்ளுவர் காட்டியுள்ளார். ஆம்! இல்லை என்ற கொடுமை யால் தீவினை செய்கிறேன்' என்று தீவினை செய்வார் மேலும் இல்லாதவராவர்; தீயினால் பொசுக்கப் பெறுவர்; இத் தீவினையாம் பகையை வெல்லுவது யார்க்கும் இயலாது; வென்றவரே அறிவுடையார். உலகில் வாழும் நாம் இன்று எத்தனையோ வகையான சூழல்களுக்கு உட்பட்டு ஏதேதோ செய்ய நினைக்கிறோம்; செய்கிறோம். ஆனால் ஆய்ந்து நோக்கின் அவ்வாறு தியன செய்யும் வகையால் பயன்விளையாத நிலையினையே அனுபவத்தில் காண்கிறோம். எனவே நாம் வாழவும் நாடு வாழவும் நானிலம் வாழவும் ஒவ்வொருவரும் எந்த நிலை யிலும் மனத்தாலும் தீவினை செய்யாதிருக்கும் செம்மை நெறியிலே செல்லப் பழக வேண்டும். அத்தகைய ஆக்க நெறியே வையத்தை வாழ வைப்பதாகும். வள்ளுவர் காட்டிய வழி நின்று நாடும் வீடும் நாமும் நலம் பெற்று உய்யும் வகையில் தீயினும் கொடிய தீவினை நீக்கி கணியென அமையும் நல்வினையைச் செய்வோமாக х X X வள்ளுவர் இல்லறவியலில் காட்டிய வினைபற்றிய கருத்துக்களுள் சிலவற்றை நேற்று எண்ணிப் பார்த்தோம். அவர் பாக்கள் சமுதாய வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ள நிலையினை இன்று அரசியலில் வரும் பாடல்கள் வழியே எண்ணிக் காணல் நலம் பயப்பதாகும் என எண்ணுகிறேன். பிறந்தவர் யாவரும் உலகம் போற்றும் சமுதாய வாழ் வினை வளமாக்கும் நல்ல.செயல்களையே செய்ய வேண்டிய வர்களாகின்றோம். வாரி வழங்கும் வள்ளன்மையினும் . வையத்தை வாழவைக்கும் அஞ்சா ஆள்வினை உடைமை