பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை செயல்-வகை 19 அவனியில் போற்றப் பெறுவது. மலைகலங்கினும் மனம் கலங்காது, உச்சி மீது வானிடிந்து வீழ்ந்து விட்ட போதிலும் உளங்கலங்காது ஆள் வினை ஆற்றி உயர்வதுவே உயர் மனிதப் பண்பு. ஆம்! அவ்வாறு அஞ்சாநிலையில் நின்று அருஞ்செயலாற்றிய அண்ணல் காந்தி அடிகளை உலகம் என்றென்றும் போற்றும் என்பது உறுதி. இதை எண்ணித் தான் வற்றாத வாழ்வுக்கு வளம் காட்டும் வள்ளுவர், 'தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு'(113) என்று நல்வினையைத் 'தாளாண்மை’ என்றும் தகைமை’ என்றும் காட்டி, அதனால் பெறும் உயர்நிலையினை வேளாண்மை' என்றும் செருக்கு என்றும் நலம்படப் பாராட்டுகிறார். இத்தகைய செயல் செய்யும் போது எத்தனையோ இடர்ப்பாடுகள் வரலாம். உலக வாழ்விலேமெய்நெறியிலே வழி காட்டிய நல்லவர் வரலாறுகள் யாவும் இந்த உண்மையை நமக்கு உணர்த்தவில்லையா? இன்னலுக்கு இடைந்து காந்திஅடிகள் வாளா இருந்திருப்பாராயின் நாம் பெற்ற சுதந்திரம் ஏது? அப்படியே சமயத் தலைவர்களெல் லாம் எதிர்ப்பு, தீமைகளுக்கெல்லாம் அஞ்சி ஒதுங்கியிருப் பாராயின் உலகம் உய்தி பெற்றிருக்குமா? எனவே செய லாற்றும் திறனுடன் திண்ணிய உளஉரமும் அச்செயல் சிறக்க இன்றியமையாததாகின்றது. வள்ளுவர் இந்த உண்மையினை ஒருபடி உயர் நிலையில் அமைத்தே விளக்குகிறார். அப்பொழுதாயினும் நாட்டுமக்கள் தளரா உழைப்பின் தலை நின்று பயன்பெறுவார்கள் என்ற காரணத்தால். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்'(119) என்பது அவர் வாக்கு. ஆம் பயனைக் கூலி என்றே சொல்லு கிறார். உலகம் அதனையே நோக்கி நிற்கின்றதாதலின்.