பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சான்றோர் வாக்கு


20 சான்றோர் வாக்கு இதன் கருத்து மனிதன் தெய்வத்தினும் மேம்பட்டவன் என்ப தன்று. மனித முயற்சி உயர்ந்த ஒன்று என்பதேயாகும். இவன் முயற்சி சிறக்குமாயின் மாறுபட நினைக்கும் அத்தெய்வம் கூட, அவன் முயற்சி கண்டு இரங்கி அவனுக்கு உதவும் என்பதைத்தான் மற்றோரிடத்தில் தெய்வம் 4.திற்றுத் தான்முந்துறும் என வள்ளுவரே காட்டுகின்றார். உலகில் எத்தனையோ வகையான செயல்கள் உள்ளன. மனிதன் அவற்றை எண்ணி ஆராயக் கடமைப்பட்டவனா கின்றான். உலக வாழ்வின் அமைப்பினை எண்ணுங்கால் சில உண்மைகள் அவனுக்கு விளங்கும். சில செயல்கள் செய்வ தால் தீமை உண்டாகும்; சில செயல்கள் செய்யாவிட்டால் தீமை உண்டாகும். ஆறறிவு படைத்த மனிதன் அச்செயல் களை ஆய்ந்து அவற்றால் சமுதாயத்துக்கும் தனக்கும் உண் டாகும் நலக்கேடுகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும். சமுதாயக் குறைபாடுகளைக் களைதல் அரசுக்கு எளிமை யாதலால், இந்தத் தெரிந்து வினையாடல், தெரிந்து செயல் வகை, ஆள் வினை உடைமை ஆகியவற்றை அரசியலில் அமைத்தனர்.போலும். ஆம்! சமுதாயத்தை அரித்து நின்ற பல தீமைகளையெல்லாம் இன்றைய அரசாங்கம் எண்ணித் துணிந்து செயலாற்றி வெற்றிபெறக் காணவேண்டு மன்றோ! வள்ளுவர் காட்டிய வழியில் செய்தக்க செய்து, அல்லன நீக்கி அறநெறியில் செல்லும் அரசாங்கத்தை அனைவரும் போற்று வரன்றோ!' - - இச்செயல்முறை எல்லாருக்கும் இயைவதன்று. சிலர் அஞ்சி,அஞ்சிச் சாவர்; சிலர் துஞ்சியேசாவர்; சிலர் சோம்புவர்; சிலர் இடைக்கண் முற்பட ஒடுவர். எனவே ஒரு சிலரே வினை நிலையறிந்து செயலாற்றுபவர். அரசியல் உயர்மட்டத்தில் இருப்பவர் திட்டம் தீட்டினும் அதைச் செயல்படுத்துபவரால் பல இடுக்கண்கள் உண்டாவதை நாம் காண்பது போன்றே வள்ளுவர் கண்டிருப்பார். அதனாலேயே இதனை இதனால்