பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


வினை செயல் வகை 21 இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' (517) என ஆணையிடுகின்றார். இது அரசியல் அதிகாரிகளுக்கு மட்டுமன்றிச் சமுதாய அடித்தளத்தில் உள்ள சாமானிய மக்களுக்கும் பொருந்தும். ஆம்! தேர்தலின்போது யார் யாரோ வந்து வாக்கினைக் கேட்பர். அவர்கள் முன்பும் இக்குறள் தீட்டப்பட வேண்டுவதே, தெளிந்த சமுதாயம் தெளிந்த ஆள்வினை உடைய செயல்வீரனைத் தேர்ந்தெடுப் பின், அவர் வழி நல்லாட்சி அமைந்து நாடு நாடாகும்; நாமும் நலம்பெறுவோம். அதுவே வள்ளுவர் காட்டும் வழி நாடு இவ்வுண்மையைப் போற்றி நடப்பதாக. . X x 率 வாழ்க்கையிலே அனைவரும் நல்ல செயலே செய்ய நினைப்பர்; அதுதான் மனித இயல்பும் கூட. ஆயினும் கொடுமைகள் பல நிகழ்கின்றனவே! காரணம் என்ன? நலம் பெற்று வாழ நினைக்கின்ற மனிதன், தன் எண்ணம் ©Ꮽ5 கூடாத வேளைகளில், தன்னை மறந்து மிருகமாகிறான். கனி இருப்பக் காய் கவர்கின்றான்; அதன் வழியே பல தீமைகள் நடைபெறுகின்றன. தனி மனிதன் தீவினை ஒருவருக்கோ ஒரு சிலருக்கோ தீமையாக முடியும். அரசாங்கங்கள் அல்லது நாடுகள் இழைக்கும் தீவினைகளோ பல நாடுகளுக்கும்ஏன்-உலகம் முழுதுக்குமே எஞ்சாத தீமை விளைப்பன வாம். ஆகவே சமுதாயத்தில் தனி மனிதனாயினும் சமூகத் தலைவனாயினும் அரசியல் அரங்கில் உலகை ஆட்டிப் படைப் பவனாயினும் செயல் செய்யுமுன் சிந்திக்க வேண்டியவன் ஆகின்றான். தனக்கே அவலம் நேரினும்,அதற்கு மாறாகத் தான் செய்ய நினைக்கும் கொடுமையினால் நாடும் உலகும் நலிவுறும் நிலையினை எண்ண வேண்டியவனாகின்றான். நின்று, நெடிது நினைப்பின், தன்செயல்தரும் கொடுமை வழி தான் பெற்ற அவலம் நீங்காததோடு சமுதாயமே துன்புறும் நிலையினை அடையும் என்ற உண்மையினை உணர்வான், அப்போது அவன் அவல நிலையும் அகன்றொழியும்.