பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சான்றோர் வாக்கு


22 சான்றோர் வாக்கு வள்ளுவர் இந்த உண்மையினை அழகாக விளக்கு கின்றார். ஒருவருக்கு நேரும் கொடுமைகளிலெல்லாம் மிகக் கொடுமை வாய்ந்தது தாய் பட்டினியாக இருப்பதைக் காண் பதாகும். எங்கோ ஒரு சிலர் இம்மரபுக்கு மாறுபடினும் இதுவே உலக நியதியாகும். அவ்வாறு தாயே பசித்திருக்கும் கொடுமை உற்றாலும், யாரும் தீவினையைச் செய்ய வேண் டாம் என வழி காட்டுகின்றார். அதைத் தீவினை என்று கூடச் சொல்லாது சான்றோர் பழிக்கும் வினை என்கிறார். இதோ அவர் வாக்கு; . 'ஈன்றாள் பசிக்ாண்பான் ஆயினும், செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656) அப்படி அல்லன செய்து ஆக்கம் பெறுவதினும் நல்லவன் என்ற பெயரோடு நல்லன செய்து நல்குரவில் வாழ்வது மேல் என்பது அவர் உள்ளக் கிடக்கை இவ்வுண்மை வீட்டுக்கு மட்டு மன்றி நாட்டுக்கும் பொருந்தும். ஆம்! இதை உணர்ந்தால் இன்று உலகை அல்லலில் ஆழ்த்தும் கோடிக்கணக்கான அல்லலும் அவதியும் இல்லையாகி இன்பம் பொங்குமே! உலகில் பிறந்தார் நல்ல பயன்பெற விரும்புகின்றனர். நல்ல வினைவழிச் சார விரும்புகின்றனர்; தமக்கு நடப்பன வெல்லாம் நல்வினையாக அமைய வேண்டிப் பாடு படுகின்றனர். இதுதான் இயற்கை. ஆனால் அந்தப் பயன், செயல், சேரும்வினை எப்படி நம்மை அடையும் என எண்ணிப் பார்ப்பதில்லை. வள்ளுவர் எண்ணிப் பார்க்கச் சொல்லுகிறார். அவரே எண்ணிப் பார்த்து அதை ஓர் உவமை வாயிலாக விளக்குகிறார். காட்டில் யானைபிடிப்பார் செயலை யாவரும் அறிவர். பழகிய யானையினை விட்டு மதம் பிடித்த காட்டு யானை யைப் பிடிப்பது தானே மரபு. ஆம்! அந்தச் செயலை வினைக்கு உவமையாக்குகிறார். நீ நல்வினையும் பயனும்