பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


வினை செயல் வகை 23 பெறவேண்டுமாயின்-நீயே அந்த நல்வினையினை மற்ற வருக்குச் செய்து வழிகாட்டவேண்டும். உன் வினையின் தன்மை உணர்ந்த நாடும் உலகும் உன்னைப் போற்றும். 'வினை விளைத்தவன் வினையை அறுப்பான்’ என்ற பழமொழியும் உண்டே! நீ செய்யும் நல்வினையே உனக்கு இயைந்த நல்வினையையும் பயனையும் தேடித்தரும்' என்கிறார். 'வினையால் வினையாக்கிக் கோடல் கினைகவுள் யானையால் யானை யாத்தற்று' (678) என்பது அவர் வாக்கு. மனிதன் நல்வினை செய்யும்போது, நாம் முன்னே கண்டபடி, பல துன்பங்கள் சாரும். அவற்றால் உளையாது, "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை என வழி காட்டுகிறார் வள்ளுவர். எனவே வையம் வாழ-சமுதாயம் செழிக்க ஒவ்வொருவரும் தீவினைக்கு அஞ்சி ஒதுங்கி, நல்வினையினையே இடரினும் தளரினும் எத்துணைத் துன்பம் வரினும் அஞ்சாது செய்ய வேண்டும் என்பது வள்ளுவர் கட்டளை. அவர்தம் கட்டளைக்குச் சான்றாக அண்ணல் காந்தி அடிகள் போன்றார்.அவ்வப்போது தோன்றி வாழ்ந்து வழிகாட்டிய காரணத்தால் தான் உலகம் இன்றளவும் மண்புக்கு மாயாது வாழ்கின்றது. நாமும் மன உணர்வோடு வாழ வேண்டிய காரணத்தால் நல்வினையாற்றி நாடும் நானிலமும் நலம்பெற ஆக்கவழி வகுப்போமாக! வலியே காலம் வினை.வயிற்றால் மாற்றான் தனக்கும் உனக்குமுள பலவா நிலையும் வினைதொடங்கும் பண்பும் அதற்காம் இடையூறும்