பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சான்றோர் வாக்கு


24 சான்றோர் வாக்கு விலகாததனை விலக்குவதும் வெல்லுமாறும் வென்றதனால் உலவாப் பயனும் முதலனைத்தும் ஒர்ந்து தெளிந்தே வினைசெய்க" என்ற பெரியோரின் அறக்கட்டளையை உங்கள் முன்வைத்து அமைகின்றேன். வணக்கம். 阿岔)岳 வள்ளுவர் திருக்குறள் வையம் உள்ள வரையில் வாழத் தக்க ஒப்பற்ற பெருநூல்; காலந்தொறும் வாழும் மக்களுக் குப் பொருந்திய நல்லறங்களை வரையறுத்துக் காட்டுவது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதிய அவர்தம் வாய் மொழி இன்றும் நமக்கும் இனிவருவோருக்கும் சிறந்த வழி காட்டியாக விளங்குகிறது. அத்தகைய பெருநூலிலிருந்து நான் இன்றும் தொடங்கி, ஏழு அதிகாரங்களில் அவர் நாம் வாழக் காட்டிய வழிநெறிகளைப் பற்றி ஒரளவு விளக்க் முன் நிற்கின்றேன். இன்று ஈகை என்னும் அதிகாரத்தின் விளக்கம் அமையும். உலக வாழ்வே ஒருவரொடு ஒருவர் பற்றி நிற்பதாலும் பலவற்றைப் பரிமாறிக் கொள்வதாலும் நடைபெறுகின்ற ஒன்றல்லவா! அதில் உள்ளார், இல்லார் என்ற வேறுபாடு நிலைத்துள்ளமை நாமறிந்த ஒன்று. இந்த ஏற்றத்தாழ்வு மக்கள் மனத்தில் இல்லாது நீங்க வேண்டுமானால் வாழ்கின்ற வளமுள்ள மனிதன், அவ்வளவு இல்லாத மற்றவரை நோக்கி ஈதல் அறத்தினை மேற்கொள்ள வேண்டும். இல்லாதவன் அந்த இல்லாமையின் காரணத்தால் உள்ளவனை நாடி உற்ற வாழ்வுக்குவேண்டியவற்றை இரந்து நிற்றல் இயல்பு. அந்த வேளையில் உள்ளவன் இல்லை என்னாது, தன்னால் கூடிய