பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


ஈகை 25 வரையில் அந்த இல்லாதவனுக்கு உதவக் கடமைப்பட்டவனா கின்றான். இந்தக் கடமை உணர்வை வற்புறுத்தவே வள்ளுவர் பத்துக் குறட்பாக்கள் இங்கே அமைத்துள்ளார். உள்ளவன் வாரிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் பொருள் வற்றி அவனும் இல்லாதவனாகி விடுவானோ என்று ஐயப்படவேண்டியதில்லை எனவும் வள்ளுவர் காட்டு கின்றார். பாத்துரண்மரீஇ யவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது’ (7) என்ற குறள்வழி கொடுத்துக் கொடுத்து குறைவார் இலர் என்று காட்டி, இல்லாமையால் நேரும் பசிப்பிணி அவரை அணுகாது எனச் சுட்டுகிறார். உலகில் எத்தனையோ வகையான இன்பங்கள் உள்ளன. வள்ளுவர் அவற்றுள் பலவற்றைச் சுட்டுகிறார். அவற்றுடன் ஈத்துவக்கும் இன்பத்தையும் இணைத்துப் பார்க்கின்றார். "பொருள் இலார்க்கு இல்வுலகம் இல்லை என்பது உண்மை பானும், அப்பொருள் தனக்கு மட்டும் உரியதன்று என்பதைப் பலவகையில் சுட்டிக்காட்டும்.வள்ளுவர்-அதனால் பெறும் இன்பம் பலவகை என்பதை உணர்த்தும் வள்ளுவர்கொடுத்து மகிழும் இன்பமும் அதனால் பெறுவதாகும் எனச் சுட்டுகிறார். ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்திழக்கும் வன்கண்ணவர், என்பது அவர் வாக்கு, ஆம். செய்யவேண்டிய கடமையைச் செய்யாதவர் களை நினைக்கும் போதெல்லாம் வள்ளுவர் கொஞ்சம் கடும்ையாகவே பேசுவார். செல்வர், உள்ளதை மற்றவர் களுக்கு - வறியார்க்குக் கொடுக்கக் கடமைப்பட்டவர். அப்படிக் கொடாதவர் கொடியவர்தாமே! எனவே அவர் களை வன்கணவர் என்கின்றார். பாவம், அவர்கள் கொடுத்து அதனால் பெறும் இன்பத்தை அறியாதவரன்றோ; இக்குறளில் மற்றொன்றையும் வள்ளுவர் குறிப்பிடத்தவற வில்லை. அவ்வாறு கொடுக்காது வைத்திருக்கும் பொருள் 字mー2