பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


#6ನುä .27 தன் கொடையைப் பறைசாற்றிக் கொள்ளாது கொடுப்பது என்பதே அவர்கண்ட பொருள். அவ்வாறு கொடுப்பவனையே 'குலனுடையாளன்’ என வள்ளுவர் குறிக்கின்றார். ஆம் இன்று வீண் பெருமையில் வாழும் பலருக்கு இந்த உரை தேவையானதாகும். 'உன் வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும்' என்ற விவிலிய நூலின் வாய் மொழியும் ஈண்டு எண்ணத்தக்கது. வள்ளுவர் கருத்து ஈதல் கடமை வழியாக அமைவதேயன்றி வெறும் புகழுக்காகவும் பிறவற்றிற்காகவும் அமைவதன்று என்பதே. எனினும் இந்தப் புகழ்ப்பயித்தியம் பிடித்தலையும் மனிதனைக் கட்டுப் படுத்த முடியாநிலையில், சரி கொடு, அப்படியாயினும் புகழுக்காகக் கொடு' என்று வள்ளுவர் அடுத்து புகழ் என்னும் அதிகாரத்தின் முதலிரு குறட்பாக்களாலே சுட்டுகிறார். 'மிக உயர்ந்த பண்பாளன் தான் செய்வது பிறர் அறியா வகையில் ஈவான். மற்றவர் எப்படியாயினும் கொடுக்கக் கடவர் என அறுதியிட்டு, அந்த ஈகையின் இன்றியமையா நிலையினையும் அதனால் உலகில் ஒரு சிலரிடம் பதுங்கி நிற்கும் பெருஞ்செல்வம் பரந்து பலருக்கும் பயன்படுநிலை யினையும் அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒருவாறு சரிசெய்யப்பெறும் தன்மையினையும் வள்ளுவர் விளக்கிக் காட்டுகின்றார். இத்தனையும் படித்தும் அறிந்தும் விளங்கிக் கொண்டும் பலர் இன்றும் வேறுவழியில் செல்லுவதை எண்ணி வள்ளுவர் வருந்தி வேறு சில உண்மைகளையும் உணர்த்துகிறார். - - இரத்தல் கொடியதுதான். அதை யாரும் மறுப்பார் இல்லை. அந்த இரக்கும் தன்மையாளன் தன் இழிநிலை யெல்லாம் சொல்லிக் காட்டி, விளக்கி ஏதேனும் பெற ஏங்கி நிற்பதைக் காண்கின்றோம். ஆனால் வள்ளுவர் அதனினும் . கொடியது ஒன்றையும் இனியது ஒன்றையும் காட்டி, கட்டிக் காக்கும் பொருளை மற்றவர்களுக்கு வழங்குமாறு வேண்டு