பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சான்றோர் வாக்கு


38 சான்றோர் வாக்கு இந்த அருள் உடமை-உயிர்கள் மாட்டு இரக்கம் எல்லாருக்கும் வரவேண்டிய ஒன்றாயினும், இது எல்லாருக்கும் இயைவதில்லை என்ற எண்ணம் வள்ளுவருக்கு உண்டா கின்றது. அதற்குக் காரணம் என்ன என்று காண நினைக் கிறது; அவர் உள்ளம் காண்கின்றது. அதை மாற்றும் வழியும் கண்டு கொள்ளுகிறது. வாய் பாடுகிறது. வலியார் முன் தன்னை நினைக்கத் தான் தன்னின் மெலியார் மேல் செல்லுமிடத்து' எனப் பாடுகிறது அவர் வாய். உலகில் வலியாரும், மெலியாரும் என்றுமே உள்ளனர். தன்னின் மெலியாரைச் சாடி, உழக்கி, வருத்தித் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது மனித நிலை. தனி மனிதனாயினும் சமூகமாயினும் நாடுகளாயினும் இந்த நியதிக்கு விலக்கு இல்லை. எனவேதான் இந்தக் கொடுமைக்கு மருந்தாக - மாற்றாக - அருளுடைமையின் கடைசிக் குறளாக இதை அமைத்து நம்மைத் தெருட்டுகிறார் வள்ளுவர். தம்பி! நீ உன்னினும் வலிகுன்றியவனைப் புடைத்து உன் வாழ்வை வளமாக்க நினைக்கிறாயே, சற்றே நில்i திரும்பிப்பார்! அதோ அந்தப் பக்கம் உன்னினும் வலியவன் ஒருவன் உன்னைத் தாக்கி, புடைத்து, அழித்துத் தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிறானே! அது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? "மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய் என்ற பழமொழி நீ படிக்கவில்லையா? என்று கேட்டு அவனுக்கு வ்ரும் பேராபத்தினை நினைவூட்டுகிறார். இதை எண்ணினால் யார்தான் மற்றவருக்குக் கொடுமை இழைப்பர்? உண்மையில் திருந்தத்தான் வேண்டும். ஆனாலும், இதை உணராது உலகம் அருளற்ற, அவல வாழ்வில் செல்கிறது. வள்ளுவர் இக்குறளின் வழியே வலியார், மெலியார்' என்ற வேறுபாடு இல்லாத சமுதாய வாழ்வு என்று நாட்டிலும் உலகிலும் மலருகிறதோ அன்றே நாமும், உலகமும் நாடும் நலமுடை