பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


அருளுடைமை 37 நாட்டான் என்ற மாறுபாடு இல்லை. கறுப்பன் சிவப்பன் எனக் காழ்ப்பு நிலை இல்லை; அவற்றுக்கு மேலே உயர்திணை அஃறிணை என்ற வேறுபாடும் இல்லை. இந்த நிலையியே அருளாளன் நிலை. இதையே சமயத் தலைவர்கள் "எவ்வுயிரும் பராபரம் சந்நிதியதாகும் எனப் பாடிச் சென்றனர். வள்ளுவர் மன்னுயிர் ஒம்பி என்கின்றார். ஆம்! அவர் புறத் தோற்றமாகிய உடலைச் சொல்லவில்லை. அகத்தில் காணா நிலையில் உள்ள உயிரைச் சொல்லுகின்றார். அவ்வுயிர் என்றும் நிலை பெற்றுள்ளமையின் மன்னுயிர்' என்றார். மேலும் உலக நலக் கேடுகள் அனைத்தையும், உயிரையும் அதனொடு சார்ந்த உளத்தையும் பாதிக்கின்ற மையின் உயிரை இங்கே சுட்டினார். அந்த உயிரை ஓம்பு' மாறு ஆணை இடுகின்றார் வள்ளுவர். ஓம்புதல் உயர்ந்த சொல். விருந்தோம்பி பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், என்ற இந்த அறத்துப்பாலினும் பிறவிடங்களிலும் வள்ளுவர் உயர்ந்து பரந்து போற்ற வேண்டிய பண்பினையே போற்றிப் பாதுகாக்கும் பொருளில், ஓம்பி என்ற சொல்லில் சுட்டுவ தறிகிறோம். எனவே, மன்னுயிர் ஒம்பி என்ற தொடரால் உயிர்களை ஓம்பிப் பாதுகாக்கும் அருளாட்சியைப் பாராட்டு கிறார். அவ்வாறு மன்னுயிர் ஒம்பின் தன் உயிர்க்கும் ஏதம் இல்லை என்பதையும் உடன் காட்டுகிறார் அவர், முல்லைக்குத் தேர் ஈந்த பாரியும் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்:வாடிய வள்ளலாரும் இந்த அருளாட்சியாளர் வரிசையில் சேர்ந்தவர்களன்றோ. ஆம்! அத்தகைய நல்லரு ளாளர்கள் இடையிடையே வாழ்ந்து அருள் பாலித்த காரணத் தாலேயே உலகம் கெடாது வாழ்கின்றது. இதை எண்ணியே வள்ளுவர் பின் ஒரு குறளில் மல்லல்மா ஞாலம் கரி' என்று கூறுகிறார். எனவே துறவறவியலின் இந்த முதல் அதிகார மாகிய அருளுடைமை என்பதன் வழியே உலகில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டிய நல்ல ஆக்கநெறிக்கு வழிகோலுகிறார் வள்ளுவர்.