பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சான்றோர் வாக்கு


36 சான்றோர் வாக்கு அந்த அருள் அவனை அடையும். ஆம்! அவன் அந்த அருளை ஆள்வான் என்று சொல்கிறார் வள்ளுவர்! நல்லாற்றான் நாடி அருள் ஆள்க, பல்லாற்றான் தேடினும் அஃதே துணை' என்பது குறள். ஆம் மனிதன் அருளை ஆளக் கடமைப் பட்டவன்; அருள் அவனை ஆளக் கூடாது. உணர்வின் வழி மனிதன் செல்வானாயின் ஒரு வேளை அவன் தன்னை மறந்து. மயங்கி, வழுக்கி விழவும் கூடும். ஆனால், அவன் அவ்வுணர்வை ஆள்வானாயின் அவன் பெருமிதத்தோடு கட்டுப்பாட்டுக்குள் நின்று வாழ முடியும். எனவேதான், “அருள் ஆள்க’ என்கின்றார். அந்த அருளை ஆளும் நிலை பெற்றபின் அந்த அருளே அவனுக்குத் துணையாக நின்று அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் அல்லாத மற்ற வருக்கும் நலம் பயக்கும் என்பது துணிவு. எனவே, பிறரை ஆள நினைக்கின்றவர்கள், உலகை ஆள நினைக்கின்றவர்கள், அருளை ஆள முதலில் பயில்வதோடு, பிறவற்றை ஆள வேறு படை முதலிய துணையை நாடாது, அந்த அருளையே துணையாக நாடவேண்டும் என்ற உண்மையினை வற்புறுத்தி அந்த அருளே வளி வழங்கும் மல்லன்மா ஞாலத்தை இருள் நீக்கி, வாழவைக்கும் என விளக்குகின்றார். அந்த அருள் பெறின்-அருளை ஆளப்பெறின் அவருக்கு அல்லல் இல்லை எனக்குறித்து, அக்குறிப்பின் வழியே அவனிக்கும் அல்லல் இல்லை என்றும் அதனால் உலகம் உயரும் என்றும் தெளிவாக்குகின்றார். அருளாளனுடைய செயல் எப்படி அமையவேண்டும் என்பதையும் வள்ளுவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இங்கே அருள் ஆள்வதாக அவர் குறிக் கின்றார். 'மன்னுயிர் ஒம்பி அருள் ஆள்வார்க்கில் என்ப தன் உயிர் அஞ்சும் வினை”. ஆம்! அந்த அருளாள னுக்கு புறத் தோற்றங்கள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. இன்னார், இனியார் என்ற வேறுபாடு இல்லை உற்றார். மற்றவர் என்ற வேறுபாடு இல்லை. எந்நாட்டான், பிற