பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


அருளுடைமை 35 வள்ளுவர் பல்வேறு வகைப்பட்ட செல்வங்கள் உலக வாழ்வின் இன்றியமையா நிலையில் உள்ளதைப் பல இடங் களில் விளக்கிக் காட்டுகிறார். கல்விச் செல்வம், பொருட் செல்வம், செவிச்செல்வம் போன்ற பிற செல்வங்களை யெல்லாம் விளக்கிய நிலையில் நின்ற வள்ளுவர் இவற்றுக் கெல்லாம் மேலானது அருள்செல்வம் என்று காட்டுகிறார். பின்னர், செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்' என்று குறளில் கேள்விச் செல்வத்தைப் பெரிதாக காட்டும் நிலையில் அது உயர்ந்ததாகத் தெரியினும், அக்கேள்விச் செல்வமும் இந்த அருட்செல்வம் பெறுதற்கு வழியாக அமையும் ஒன்றாகலின், அதனினும் இது மேம்பட்டது என்பதும் இதன் வழியே உலக உயிர்க்ள் அனைத்தும் இன்ப நெறியில் வாழ வழிவகுக்கப்பெறுகிறது என்பதும் உணர்தல் வேண்டும். பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள' என்ற இந்த அதிகாரத்தின் முதற் குறளின் பின்பகுதிக்குப் பொருளான் வரும் செல்வங்கள் என மேலாகப் பொருள் கொள்ளாது பின் பொருட்பாலில் வரும் செல்வங்கள் அல்லது பொருள் பற்றி வரும் செல்வங்கள்' எனப் பொருள் கொள்ளின் இந்த அருள் செல்வத்தின் ஏற்றம் நன்கு விளங்கும். பின் ஒரு குறளில் பொருட் செல்வத்தை அருட் செல்வத்தோடு தனியாக ஒப்பிடுகின்றமையின் (8) இங்கே இந்த உரையே ஏற்புடைத்ததாகவும் அமையும். உலகில் பிறந்த மனிதன் எத்தனையோ வகையில் ஓடி, யார் யார் துணையையோ பற்ற நினைக்கிறான். அப்படியே எதை எதையோ பிடித்து, எப்படி எப்படியோ கட்டி ஆள நினைக்கின்றான். வள்ளுவர் இந்த ஆளுமை'யையும் துணை யையும் ஒரே குறளில் பிணைத்து உயர்ந்த உண்மையினை உலகுக்கு உணர்த்துகிறார். உலகம் நல்ல வழியில் வாழ எத்தனையோ நெறிகள் வகுக்கப்பெற்றுள்ளன. அவற்றின் வழியே வாழ்ந்தால் நிச்சயம் அவன் அருளானவன் ஆவான்.