பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சான்றோர் வாக்கு


34 - - சான்றோர் வாக்கு நல்லன ஆற்றி,நாட்டு வளமும் உலக உயர்வும் சிறக்கச் செயல் பட வேண்டுமெனக் கேட்டு அமைகின்றேன். அருளுடைமை உலகில் பிறந்து மனைவி மக்களொடு வாழ்ந்து சுற்றம் தழுவி அவர்கள் மாட்டெல்லாம் அன்பைப் பொழிந்து வாழும் மனிதன், பிற எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, அவர் களிடத்தும், அவற்றினிடத்தும் கருணை உள்ளம் படைத் தவனாய் வாழும் நிலையில் நிற்பதையே அருளுடைமை' என்கிறோம். திருக்குறளில் இல்லறம், துறவறம் என்ற இரு நிலையாக வாழ்க்கையினைப் பாகுபடுத்தி, முதலில் இல்லற நெறிக்கு வேண்டிய அறங்களையெல்லாம் வரிசைப்படுத்திக் காட்டிய வள்ளுவர், துறவறநெறிக்கு முதலாவதாய் 'அருளுடைமையினை இங்கே காட்டுகின்றார் என்று இது துறவறத்தின் முதல் அதிகாரமாக வைக்கப்பெற்றமைக்குரிய காரணத்தை, உரையாசிரியர்களும், பிறரும் காட்டுவர். எனினும் இவ்வருளுடைமையும் துறவறத்தின்பால் சார்த்தப் பெறினும் மக்களாகப்பிறந்த அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றே எனக்கொள்ளல் வேண்டும். அன்புடைமையின் எல்லை விரிவே அருளுடைமை. தான் கொண்ட மனைவி, பெற்ற மக்கள், உற்ற சுற்றத்தார், தொடர்புள்ள பிற சார்பாளர்கள் இவர்களிடம் செல்லும் உணர்வினை-பற்றினை-பாசத்தை 'அன்பு’ எனக் கொண்டு, அந்த எல்லைக்கு அப்பாற்பட்ட எல்லையற்று விரிந்து யாண்டும் யாவர் மாட்டும்-தொடர் பல்லாத எல்லா உயிர்களிடத்தும் காட்டும் கருணையினை 'அருள் என்றும் ஏற்பது முறையாகும். இதைத்தான் வள்ளுவரும் அருளென்னும் அன்பீன் குழவி' என்று பின் பொருட்பாவில் விளக்கிக்காட்டுவர். எனவே இந்த அருள் நிலை உலக உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை ஆகும்.