பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


புகழ் - 33 செய்து நீள்புகழ் பெறாத மக்களைப் பெற்று அவர்களைத் தாங்கும் நிலத்தை எண்ணுகிறார் வள்ளுவர். நிலம் என்னும் நல்லாள் என்று நிலத்துக்கு நல்ல பெயர் சூட்டிய வள்ளுவர். அந்த நிலத்துக்குரிய, இசை ஒழிய அந்த நிலம் வாழவேண்டிவருமே என அவர் நல்லுள்ளம் வருந்துகின்றது. அந்த நல்ல நிலம், வசைவுற்று, வளமற்றுப் போகும் என்பதை விளக்கத் தவறவில்லை அவர், வசைஇலா வண்பயன் குன்றும், இசையிலா யாக்கை பொறுத்த நிலம் என்பது அவர் வாக்கு. புகழால் அமைந்த நல்லுயிர் இன்றி வெற்றுடம்பினராகிய யாக்கையை இந்த உலகம் தாங்க வேண்டுமா எனக் கேட்கிறார். தாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. அவ்வாறு நல்லன செய்யாது, அல்லல் விளைவிப்பவர் வாழ்வதால் நாடு நாடு என்ப நாடா வளத்தன என்ற நிலையிலிருந்து மாறி, தன் வண்பயனாகிய வளமெல்லாம் அழிய, மக்கள் பசியும் பிணியும் பகையும் பற்றி வாடுவார்கள் என்பதை இக்குறள் வழி வள்ளுவர் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றார். இன்று நாம் கண்முன் கானு கின்ற காட்சி தானே இது. ஆம். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும், இல்லாத-பற்றாத கொடுமை இந்த உயிரோடு யாக்கை பெற்றும் உயிர் உணர்வற்ற மாக்க ளால் தானே நிகழ்கின்றது. உலகம் வாழ வேண்டுமாயின் இத்தகைய கொடுமையாளர்கள் இல்லாது ஒழியவேண்டும் என்பதையே உலகம் அவர்களைத் தாங்கக் கூடாது' எனச் சுட்டுகிறார். ஆம். இப்புகழ் என்னும் அதிகாரத்தால் வள்ளுவர் தனிமனிதன் புகழ் எப்படித் தரணியையே உயர்த்தும் என்பதையும் அத்தகைய அறமாற்றிப் புகழ் பெறாத வசையாளர் வழியே வையமும் சமுதாயமும் எப்படி மாறும் என்பதையும் காட்டுகின்றார், என்றென்றும் புகழொடு வாழ விரும்பும் மக்களினம் இந்த வள்ளுவர் காட்டிய கடமை உணர்வைக் கருத்திருத்தி