பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சான்றோர் வாக்கு


32 சான்றோர் வாக்கு உலகில் பிறக்கின்றோம் நாம். வளர்கின்றோம்; வாழ் கின்றோம்; வாழ்நாள் கழிகின்றது. கடைசியில் இறக் கின்றோம். இது மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லா உயிரினங் களுக்கும் பொதுவான் நியதி. ஒரறிவுடைய மரம் தொடங்கி எல்லா உயிர்களும் பிறந்து, இருந்து, வாழ்ந்து மறை கின்றன. ஆனால், ஆறு அறிவுடைய மனிதன் பிறவற்றினும் மேம்பட்ட காரண்த்தினால், தான் என்றும் நிலைக்க வழி காணவேண்டாமா? என்க் கேட்கிறார் வள்ளுவர். அப்பா' மனிதா, நீ, உலகில் பிறந்தாயே, எப்படியும் மறையப் போகிறாயே! நீ மறைந்தபின் உன் பிறந்து வாழ்ந்த நிலைநின்ைவு, உலகில் என்றும் இருக்க நீ என்ன செய்தாய்? ஒன்றும் செய்யவில்லையா? வெட்கம். நீ ஏன் பிறந்தாய்? பிறவாதிருந்தாலும் நலம்ாக இருந்திருக்குமே? எனக்கேட்டு, அத்தன்கிய புகழில்லாதவர் பிறத்தலினும் பிறவாமை நன்று என விள்க்குகிறார் வள்ளுவர். தோன்றிற் புகழொடு' தோன்றுக் அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று; என்பது அவ்ர் வாக்கு. இவ்வாறு மக்களாகப் பிறந்து அறமாற்ற்ாது பயனின்றிக் கழிவதோடு, மாறாகப் பல கொடும்ைக்ளைச் செய்து இகழ்ச்சி உறுவார்களே என்ற இரக்க உணர்வின்ாலேயே வள்ளுவர் பிறவாமை நன்று என்று கூறு கின்றார். ஆம். பலர் சமுதாய நெறிக்கு மாறுபட்ட, சமுதா யத்தின் நிலைகெடத்தக்க பல் கொடுமைகளைச் செய்து இகழ்ச்சியுற்றுத் தாமும் கெட்டுச் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் கொடுமையை எண்ணிய அவர் நல்ல உள்ளம் வருந்தி பிறவாமை நன்று எனக் கூற வைத்தது. உண்மை தான். இத்தகைய வன்கணாளர் பல்ர் தோன்றாதிருந்திருப் பின்-நல்லவை செய்து நீள் புக்ழ் பெறுவார் பலர் பிறந் திருப்பின் இன்று உலகில் எத்துணையோ கொடுமைகள் இல்லாதிருக்குமல்லவா. t - இக்கருத்தினை வள்ளுவர் மற்றொரு குறள் வழித் தெளி வாகவே விளக்கிக்காட்டுகின்றார், இததகைய நல்லன.